என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 27.4.2025 முதல் 03.5.2025 வரை
27.4.2025 முதல் 03.5.2025 வரை
முயற்சிகளில் வெற்றி உண்டாகும் வாரம். லாப ஸ்தானத்தில் சகாய ஸ்தான அதிபதி சூரியன். எதிர்மறை எண்ணங்கள் அகலும். சில கெட்டவைகள் கூட நல்லதாக அமையும். ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு, பேராசை, ஈகோ, பொறாமை போன்ற கெட்டவற்றில் இருந்து விடுபடுவீர்கள். உறவினர்களின் வருகையால் பகைமை மறையும்.
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். புதிய வீடு கட்டுதல், வாகனம் வாங்குதலில் நாட்டம் அதிகரிக்கும். குடும்பத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை சீராக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் மற்றும் வாழ்க்கைத்துணை மூலம் கிடைக்கும் வருமானம் குடும்ப வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். உங்களுக்கு மன அமைதியைத் தரும், வாழ்க்கைப் பாதையில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய சில புதிய நட்புகள் கிடைக்கும்.
வாரிசுகளின் பிரச்சினைகளுக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் மேல் விழுந்த கலங்கம் அகலும். ஆரோக்கிய குறைபாடு அகலும். திருமணப் பேச்சு வார்த்தை சிறு தடங்களுக்கு பிறகு சீராகும். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். தினமும் விஷ்ணு சகஸ்ஹர நாமம் படிக்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






