என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    முன்னேற்றமான வாரம். ராசிக்கு 11ல் உச்ச சூரியன். சுய ஜாதக ரீதியான தோஷங்களும், சாபங்களும் விலகும். உடல் மற்றும் மனதில் புத்துணர்வு பெருகும். ஆடை, ஆபரணங்கள், சொத்து, சுகம் கால்நடை பாக்கியங்கள் கிடைக்கும். மனைவி மற்றும் தொழில் கூட்டாளிகளால் ஆதாயம் உண்டாகும். நண்பர்களுடன் இணைந்து புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடலாம்.

    அடிமட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயரும். குறைந்த உழைப்பில் நிறைந்த ஊதியம் கிடைக்கும். கடந்த கால இழப்புகளில் இருந்து மீளக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். கடன் தொல்லை கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் முக்கிய தொண்டர்களுடன் கட்சி வளர்ச்சிக்கான சந்திப்புகளை நடத்துவார்கள்.

    20.4.2025 மாலை 6.04 முதல் 23.4.2025 அன்று காலை 12.31 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பய உணர்வும் மிகுதியாக இருக்கும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல் படவும். முக்கியமான சந்திப்புகளைத் தவிர்க்கவும். பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×