என் மலர்
மிதுனம்
வார ராசிபலன் 14.9.2025 முதல் 20.9.2025 வரை
14.9.2025 முதல் 20.9.2025 வரை
சிந்தனையில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும் வாரம். ராசி அதிபதி புதன் உச்சம் பெற்று வெற்றி ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைந்து சனி பார்வையில் உள்ளார். தற்போது இருக்கும் நிலையில் மாற்றங்கள் உண்டாகும். தடை, முடக்கம், நஷ்டம் என்ற நிலை மாறி அபி விருத்தி உண்டாகும். பங்குச் சந்தை வணிகத்தில் சாதனை புரிவீர்கள்.
குடும்ப உறவுகளால் ஏற்பட்ட கவுரவ குறைபாடு சீராகி நிம்மதியான நிலை நீடிக்கும். தொழிலில் நிலவிய இழுபறிகள் விலகி சாதகமான சந்தர்ப்பம் உருவாகும். உத்தி யோகஸ்தர்கள் முன்னேற்றமான நிலையை அடைவார்கள். அசையாச் சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் வெற்றி உண்டாகும். பிள்ளைகளால் பெற்றோர்க்கும், பெற்றோர்களால் பிள்ளைகளுக்கும் நன்மை பயக்கும்.
சுப நிகழ்விற்கான அறிகுறிகள் உண்டாகும். கணவன், மனைவிக்குள் இருந்த பனிப்போர் விலகி சந்தோஷமான நிலை ஏற்படும். பெண்களுக்கு குடும்பத்தில் செல்வாக்கு உயரும். இளம் பெண்களுக்கு திருமண தடை நீங்கும். மகாளய பட்ச காலத்தில் வசதியற்ற மாணவ மாணவியர்களின் தேவையறிந்து உதவுவது சிறப்பாகும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






