என் மலர்tooltip icon

    மிதுனம்

    வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை

    14.12.2025 முதல் 20.12.2025 வரை

    மிதுனம்

    விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் ராசிக்கு 6ம் இடத்தில் சஞ்சரிக்கிறார். ராசியில் உள்ள வக்ர குருவிற்கு சூரியன் செவ்வாய் சுக்கிரன் பார்வை உள்ளது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் இருந்தாலும் அதன் மூலம் லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிர் பார்த்த புதிய வேலை முயற்சி வெற்றி தரும்.

    பழைய பாக்கிகள் வசூலாகும். எதிலும் வெற்றி உண்டாகும். குழந்தைகள் உங்கள் சொற்படி கேட்டு நடப்பதால் சந்தோஷம் கொள்வீர்கள். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன்கள் இனி கொஞ்ச கொஞ்சமாக வசூலாகும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த பிரச்சினைகள் அகலும்.

    திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும்.

    வீடு, வாகனம் வாங்கும் எண்ணம் அதிகரிக்கும். அதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மனம் மகிழும் படியான நிகழ்ச்சி நடக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிவ வழிபாடு செய்வதன் மூலம் மகிழ்ச்சி கூடும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×