என் மலர்
மிதுனம் - வார பலன்கள்
மிதுனம்
இந்த வார ராசிபலன்
29.04.2024 முதல் 05.05.2024 வரை
லாபகரமான வாரம். ராசி அதிபதி புதன் நீசம் பெற்றாலும் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் பதவியில், உத்தியோகத்தில் இருந்த நெருக்கடி நிலை குறைந்து உழைப்பிற்கான பலன் கிடைக்கும். பணி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் திறமைக்கு தகுந்த நல்ல வேலை கிடைக்கும்.
தொழில் விருத்திக்காக எதிர்பார்த்த பொருளாதார உதவிகள் கிடைக்கும். தொழில், உத்தியோக ரீதியான பயணங்கள் லாபம் பெற்றுத்தரும். ஆன்லைன் மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களில் வணிகம் புரிபவர்களுக்கு தொழில் வளர்ச்சி பெருகும். வீடு, மனை, வாகன எண்ணங்களை நிறைவு செய்யக் கூடிய சாத்தியக் கூறுகள் உருவாகும். பூர்வீகம் தொடர்பான சகோதர சச்சரவுகள் விலகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வராக்கடன்கள் வசூலாகும். பெண்களுக்கு தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டு. தந்தையின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தென்படும்.
30.4.2024 அன்று காலை 10.36 மணி முதல் 2.5.2024 அன்று பகல் 2.32 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதன்கிழமை ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
22.4.2024 முதல் 28.4.2024 வரை
எண்ணங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் மற்றும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் ராகுவுடன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம். கடினமான செயல்களை கூட இலகுவாக எளிதில் முடித்து காட்டுவீர்கள். திறமை இருந்தும் சாதிக்க முடியவில்லை என்ற அச்சம் நீங்கும்.முக்கிய விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.தாய் மாமாவுடன் ஏற்பட்ட மன பேதம் சீராகும். வார இறுதியில் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் சில மிதுன ராசியினருக்கு புதியதாக அரசியல் ஆர்வம் அதிகரிக்கும்.
எதிர்கால நலனுக்காக முதலீடு சார்ந்த திட்டங்களில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். வார இறுதியில் சுக்ரன் உச்ச நிவர்த்தி அடைவதால் பங்குச் சந்தை வர்த்தகர்கள் சந்தை நிலவரம் அறிந்து செயல்பட வேண்டும். புதிய தொழில் ஒப்பந்தங்கள் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வால் மனதில் மகிழ்ச்சி பொங்கும். உடன் பிறப்புகளால் ஏற்பட்ட மனக் கசப்பு சுமூகமாகும். திருமணப் பேச்சு வார்த்தை நல்ல முடிவிற்கு வரும். சிலர் பிள்ளைகளின் முன்னேற்ற செல விற்கு கடன் பெறலாம் ஆரோக்கியம் சிறக்கும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். பவுர்ணமியன்று மகாவிஷ்ணுவை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
15.4.2024 முதல் 21.4.2024 வரை
திட்டங்களை செயல்படுத்த ஏற்ற வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம். முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் என முக்கிய கிரகங்கள் மிதுன ராசிக்கு சாதகமாக இருப்பதால் இனிய செய்திகள் கிடைக்கும். நன்மைகள் பல நடைபெறும்.வெற்றி உறுதி. விரும்பிய பதவி தேடி வரும். பொருளாதார நிலை சீராகும்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற நிலை மறையும். குடும்ப சுமை குறையும்.பணம் எனும் தனம் சமூக அங்கீகாரத்தை பெற்றுத் தரும்.
ராஜ மரியாதை கிடைக்கும். அதிர்ஷ்டம், புதையலை நம்பி கால விரயம் செய்வீர்கள்.குழந்தை குழந்தை பாக்கியம் ஏற்படும். இதுவரை ஒரு தொழில் செய்தவர்கள் புதிய இணைத் தொழில் துவங்குவார்கள். சிறிய தொழில் செய்தவர்கள் தொழிலை விரிவுபடுத்துவார்கள்.
அடமானத்தில் உள்ள சொத்து நகைகளை மீட்பார்கள். பிள்ளைகளுக்கு நல்ல இடத்தில் சம்மந்தம் முடிப்பீர்கள். சிலருக்கு இரண்டாவது குழந்தை பிறக்கும். பத்திரிக்கை, ஊடகங்களில் பணி புரிபவர்களின் தனித்திறமை மிளிரும். உடன் பிறந்தவர்களால் சகாயமான பலன் உண்டு. சுப செலவுகள் சுப விரயங்கள் நடக்கும்.விநாயகரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
8.4.2024 முதல் 14.4.2024 வரை
மகிழ்ச்சியான வாரம். ராசி அதிபதி புதன் வக்ரம் பெற்றாலும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் உச்சம் பெறுவதால் சிந்தனைகள், எண்ணங்களின் வேகம் அதிகரிக்கும். பல வருடமாக உழைத்த உழைப்பிற்கு பலன் கிடைக்கும் காலம் வந்துவிட்டது. பணப்புழக்கம் சரளமாக இருக்கும். ஒரு சிலருக்கு லாட்டரி, பங்கு பத்திரம், பரிசுக் கூப்பன் மூலம் பெரும் அதிர்ஷ்ட பணம் கிடைக்கும். பழைய கடன்களை அடைத்து விட்டு புதிய வீடு, வாகனம் வாங்கலாம். உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்.தொழில் முன்னேற்றம் உண்டாகும் . தொழில் ஞானம், தந்திரம் மிகுதியாகும். சகோதர, சகோதரிகளால் சகாயங்கள் உண்டாகும்.
அரசியல்வாதிகள், அரசியல் தலைவர்கள் முக்கிய தொண்டர்களுடன் கட்சி வளர்ச்சிக்கான சந்திப்பு களை நடத்து வார்கள். தொழில், உத்தியோகத்தில் சாத கமான நிலை நீடிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். தாய் மற்றும் தாய் வழி உறவுகளுடன் வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். இல்லத்தில் சுப நிகழ்வுகள் பற்றிய பேச்சு நடைபெறும். வராகி அம்மனை வழிபட வளங்கள் கூடும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
1.4.2024 முதல் 7.4.2024 வரை
பொறுப்புகள், கடமைகள் அதிகரிக்கும் வாரம்.ராசி மற்றும் சுக ஸ்தான அதிபதியான புதன் லாப ஸ்தானத்தில் வக்ரம். லாப ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்கள் அதிக நன்மையைத்தரும். இது வரை உங்களைத் துரத்திய அவமானம், நஷ்டம், கவலைகள் விலகும். பிறரை நம்பி களத்தில் இறங்கி ஏமாற்றம் அடைந்த நீங்கள் சுய நம்பிக்கையில் இழந்ததை ஈடுகட்டுவீர்கள். சொந்த வீடு, வாகனம் இல்லாதவர்களுக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உள்ளது. சிலர் புதியதாக சுய தொழில் துவங்கலாம். சிலர் வேலையில் இருந்து விடுபட்டு கடன் பெற்று புதிய சுய தொழில் அல்லது கூட்டுத் தொழில் துவங்க லாம். வாழ்க்கைத் துணை, நண்பர்கள், தொழில் பங்குதாரர்கள் வழி இருந்த விரக்தி மன இறுக்கங்கள் மாறும்.
விவசாயி களுக்கு விளைச்சல் அமோகமாக இருக்கும். நல்ல வருமானமும் கிடைக்கும். ஆரோக்கியத்தால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். வைத்தியம் பலன் தரும்.திருமண முயற்சி நிறைவேறும். 3.4.2024 அன்று அதிகாலை 4.37 முதல் 5.4.2024 அன்று காலை 7.12 மணி வரை சந்தி ராஷ்டமம் இருப்பதால் எல்லாம் திட்டமிட்டபடி சரியாக நடந்தாலும் இனம் புரியாத பய உணர்வும் இருந்து கொண்டே இருக்கும். நவகிரக புதனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
25.3.2024 முதல் 31.3.2024 வரை
புண்ணிய பலன்கள் நடக்கும் வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் உச்சம் பெறுவதால் மிதுனத்திற்கு தடைக் கற்களை படிக்கற்களாக மாற்றும். முன்னோர்கள் நல்லாசியாலும் குல தெய்வ அருளாலும் தான தர்மங்கள், முன்னோர் வழிபாடு செய்து பாக்கிய பலனை அதிகரிப்பீர்கள். தடைபட்ட நிறைவேற்றாத குல தெய்வ பிரார்த்தனைகளை நிறை வேற்ற ஏற்ற காலம். பாக்கியபலத்தால் உங்களுக்கு வந்த பிரச்சி னைகள் வீட்டை விட்டு வெளியேறும். வரப்போகும் பிரச்சினைகள் வீதியோடு நின்று விடும். குழந்தை இல்லாதவர்களுக்கு குலதெய்வமே குழந்தையாக வந்து பிறக்கும். பங்குச் சந்தை ஆதாயத்தால் வருமானம் இரட்டிப்பாகும்.
நீண்ட காலமாக அனுப வித்து வந்த டென்சன், மன உளைச்சலில் இருந்து விடுபடுவீர்கள். சந்தேகம், ஊக்கமின்மை, நம்பிக்கைக் குறைவு விலகும். சுய கவுரவம், மரியாதை காப்பாற்றப்படும். தொழில், உத்தியோகத்தில் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும்.7ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் பெற்றோர்கள், பெரியோர்களின் நல்லா சியுடன் திருமணம் நடக்கும். வரன் பற்றிய பெரிய எதிர்பார்ப்பை குறைத்தால் உடனே திருமணம் நடக்கும். மேலும் பல பாக்கி யங்களை அதிகரிக்க மகாலட்சுமியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
18.3.2024 முதல் 24.3.2024 வரை
திட்டங்கள் நிறைவேறும் வாரம். ராசி அதிபதி புதன் நீசம் பெற்று 3-ம் அதிபதி சூரியன் மற்றும் ராகுவுடன் சேர்க்கை பெறுவது அசுபம் என்றாலும் 3ம்மிடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் தைரியம் தன்னம்பிக்கை மேலோங்கும். வீண் பழிகள் விலகும்.சிலருக்கு குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரும் தொழில் வாய்ப்புகள் தேடி வரும். அதில் மற்றவர்களின் உதவி, குறிக்கீடு இல்லாமல் முக்கியமான வேலை களை நீங்களே கையாள்வீர்கள். உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு, வேலை மாற்றம், இடமாற்றம் பற்றிய சாதகமான தகவல் வந்து சேரும்.
புதிய சொத்துக்கள் மற்றும் வாகனம் வாங்கும் முயற்சியை ஓரிரு வாரம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். 7-ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் இந்த வாரத்தில் வரன் அமைந்து விடும். வைகாசியில் திருமணம் நடக்கும். பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும்.வைத்தியம் பலன் தரும். பச்சை நிறப் பொருட்களை அதிகம் பயன்படுத்த அதிஷ்டம் அதிகரிக்கும். பவுர்ணமியன்று காவல் தெய்வங்களை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
11.3.2024 முதல் 17.3.2024 வரை
மன நிறைவான வாரம். ராசி அதிபதி புதன் நீசமடைந்து தொழில் ஸ்தானத்தில் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் இணைவது புத ஆதித்திய யோகம். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் துரிதமாகும். துணிச்சலாக செயல்பட்டு இலக்கை அடைவீர்கள். குலத் தொழில் செழித்து வளரும். தொழில், உத்தியோகத்தில் திட்டமிட்டு வெற்றிக் கனியை சுவைப்பீர்கள். தொழிலை விரிவுபடுத்த தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் திருமணம், வளை காப்பு, பெற்றோர்களின் மணிவிழா என வீட்டில் தொடர் சுப நிகழ்வுகள் நடந்து கொண்டே இருக்கும்.
வயது முதிர்ந்தவர்களுக்கு ஆன்மிக பயணம் மேற்கொள்ள வாய்ப்பு கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசியும், ஆஸ்தியும் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்குள் நிலவிய பிணக்குகள் நீங்கி இணக்கம் ஏற்படும். வீடு கட்டும் பணி துரிதமாகும். ராசி அதிபதி புதன் ராகுவுடன் சேருவதால் தோல் அலர்ஜி, அரிப்பு போன்ற சிறிய உடல் உபாதைகள் இருக்கும். பெண்களுக்கு தாயின் ஆதரவு கிடைக்கும். சிவபுராணம் படிக்க தொல்லைகள், மனக் கவலைகள் அகலும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
4.3.2024 முதல் 10.3.2024 வரை
புதிய முயற்சிகள் கைகூடும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன், சனி சேர்ந்து முயற்சி ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தையின் ஆசியும் ஆஸ்தியும் கிடைக்கும். மாமனார், சகோதரர் மூலம் தன வரவு உண்டாகும். 3ம் இடத்திற்கு குருப் பார்வை இருப்பதால் சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். எத்தகைய சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் ஆற்றலைப் பெறுவீர்கள். எடுக்கும் முயற்சியில் தடையில்லாத வெற்றி கிட்டும். விலை உயர்ந்த நவீன ஆடம்பர பொருட்கள் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் புத்திர பிராப்தம் உண்டாகும். திருமண முயற்சி சாதகமாகும். 6.3.2024 இரவு 10.04 முதல் 8.3.2024 இரவு 9.20 வரை சந்திராஷ்டமம் உள்ளதால் நெருக்கமானவர்களிடம் இருந்து சற்று விலகி இருக்கவும். பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சிவராத்திரியன்று வில்வ மாலை அணிவித்து சிவபெருமானை வழிபடுவது நன்று.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
26.2.2024 முதல் 3.3.2024 வரை
புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய ஸ்தானத்தில் பாக்கிய அதிபதி சனி மற்றும் முயற்சி ஸ்தான அதிபதி சூரியனுடன் சஞ்சரிக்கும் சாதகமான வாரம். மன சஞ்சலம், பய உணர்வு அகலும். புதிய தெம்பு, தெளிவு பிறக்கும். எதிர்மறை பிரச்சினைகள் விலகும். தகவல் தொடர்புத் துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்களின் தனித்திறமை கவுரவிக்கப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம், திருப்பம் உண்டாகும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சினைகள், இன்னல்கள் மறையும். அரசு உத்தியோகம், வெளிநாட்டு வேலை முயற்சி ஈடேறும். உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றத்தால் மகிழ்ச்சி அடைவார்கள்.
உடன்பிறந்தவர்களுடன் பாகப்பிரிவினை ஏற்பட வாய்ப்புள்ளது. கை மறதியாக வைத்த ஆவணங்கள், தொலைந்த பத்திரங்கள், நகைகள் கிடைக்கும். உயர் கல்வி முயற்சி வெற்றி தரும். மாற்றுமுறை வைத்தியத்தில் உடல் நிலை தேறும். திருமணம் குழந்தை பேறு, புதிய சொத்துக்கள் சேருதல் போன்ற வாழ்வில் மறக்க முடியாத இனிய நிகழ்ச்சி கள் நடைபெறும். லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
19.2.2024 முதல் 25.2.2024 வரை
பாக்கிய பலன்கள் மிகுதியாகும் வாரம். ராசி அதிபதி புதன் பாக்கிய அதிபதி சனி மற்றும் சகாய ஸ்தான அதிபதி சூரியனுடன் பாக்கிய ஸ்தானத்தில் சேருவது. மிதுனத்திற்கு அதீத யோகம் தரும் அமைப்பாகும். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் நிறைவேறும். இடப்பெயர்ச்சி செய்ய நேரும். வீடு மாற்றம், ஊர் மாற்றம், நாடு மாற்றம், வேலை மாற்றம், தொழில் மாற்றம் என அவரவர் வயதிற்கு, தசா புத்திக்கு ஏற்ற சுப மாற்றம் நிச்சயம் உண்டு. உத்தி யோகஸ்தர்கள் தங்கள் திறமையை வெளிபடுத்த சரியான சந்தர்ப்பம் கிடைக்கும். திரும ணத்திற்கு நல்ல வரன் அமையும். புத்திர பிராப்த்தத்தில் நிலவிய தடைகள் விலகும்.
குலதெய்வ கடாட்சம் மற்றும் முன்னோர்க ளின் நல்லாசிகள் கிடைக்கும். தாராள தன வரவால் குடும்பத்தில் மகிழ்ச்சி, குதூகலம் கூடும்.கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகள் வேற்றுமை மறந்து மீண்டும் சேருவார்கள். உடல்நிலை, மனநிலையில் மாற்றமும், முன்னேற்றமும் இருக்கும். மாசி மகத்தன்று சிவனுக்கு பஞ்சகவ்யத்தால் அபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
மிதுனம்
இந்தவார ராசிபலன்
12.2.2024 முதல் 18.2.2024 வரை
திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி புதன் 8ல் உச்சம் பெற்ற 6,11ம் அதிபதி செவ்வாயுடன் சேர்க்கை.பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சனியுடன் முயற்சி ஸ்தான அதிபதி சூரியன் பல்வேறு ஆசைகளால் மனம் அலைபாயும். ஆன்ம பலம் பெருகும். புதிய சிந்தனைகள் உரு வாகும். வீடு கட்டி குடியேறுதல் புதிய வாகனம் வாங்குதல் என பல ஆசைகளை நிறைவேற்ற முயற்சிப்பீர்கள். இதுவரை நிலையான வேலை இல்லாதவர்களுக்கு நிரந்தரமான வேலை கிடைக்கும்.சிலருக்கு அரசு உத்தியோகத்திற்கு இணையான உத்தியோகம் கிடைக்கும்.
விபரீத ராஜ யோகத்தால் மறைமுக வருமானம் அதிகரிக்கும். வழக்குகள் தள்ளிப் போகும். பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு குருப் பார்வை இருப்பதால் எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் உருவாகும். வாழ்க்கைத் துணைக்கு இடமாற்றம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலர் எலும்பு, நரம்பு தொடர்பான பிரச்சினைக்கு சிகிச்சை செய்ய நேரும். சிலருக்கு கடன் சுமை கூடும். பெண்களுக்கு தாய் வழிச் சீதனம் கிடைக்கும். அநாவசிய வம்பு வழக்குகளை தவிர்க்கவும்.புதன் கிழமை விஷ்ணு சகஸ்ஹர நாமம் கேட்கவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






