என் மலர்tooltip icon

    மிதுனம் - வார பலன்கள்

    மிதுனம்

    வார ராசி பலன்கள்

    30.5.22 முதல் 5.6.22 வரை

    தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும். வார இறுதியில் ராசி அதிபதி புதன் வக்ர நிவர்த்தி பெறுவதால் பொருளாதாரச் சிக்கலில் இருந்து விடு படுவீர்கள். ஆரோக்கிய தொல்லை சீராகும். உடன் பிறந்தவர்களின் நலனுக்காக சிறிய பொருள் விரயத்தை சந்திக்க நேரும்.

    ராசியை செவ்வாய் பார்ப்பதால் முக்கிய பணிகள் சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு வெற்றி தரும். தொழிலில் நிலவிய சங்கடங்கள் விலகி முன்னேற்றத்திற்கான அறிகுறி தென்படும். புதிய தொழில் வாய்ப்புகளை வரவழைத்துக் கொள்வீர்கள். 9-ல் சனி ஆட்சி பலம் பெறுவதால் தந்தை வழி உறவுகளிடம் இருந்த சங்கடங்கள், பிரச்சினைகள் விலகி ஆதரவு உண்டாகும்.தொழில், உத்தியோக ரீதியான வழக்கின் தீர்ப்பு சாதகமாகும்.

    பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை, முக்கிய முடிவுகளை இந்த வாரத்திற்குள் முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம். கணவன் மனைவியிடம் ஒற்றுமை அதிகரிக்கும். புதன் கிழமை ஸ்ரீ வித்யா லட்சுமியை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன் 23.5.22 - 29.5.22

    5-ம் அதிபதி சுக்ரன் லாப ஸ்தானத்தில் ராகுவுடன் சேர்க்கை பெற்றதால் நெடுங்காலமாக தடைபட்ட புத்திர பிராப்தம் கிட்டும். 6-ம் அதிபதி செவ்வாய் 10-ம் அதிபதி குருவுடன் இணைவதால் அஷ்டமச் சனியால் வேலை இழந்தவர்களுக்கு மீண்டும் நல்ல வேலை கிடைக்கும்.

    அஷ்டமச் சனி முடியவில்லை என்பதால் கடன் விசயத்தில் சிந்தித்து செயல்பட வேண்டும். ராசி அதிபதி புதன் விரயத்தில் மறைந்து வக்ரம் பெற்றதால் வீண் அலைச்சல்கள், விரயங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு உயில் அல்லது முக்கிய ஆவணங்களை வைத்த இடம் மறந்து போகும்.

    சிலர் தொலைந்த பத்திரங்களுக்கு புதிய நகல் உருவாக்குவார்கள். பெண்களின் முயற்சிக்கு மாமியாரின் ஒத்துழைப்பு கிடைக்கும். 9-ல் சனி ஆட்சி பலம் பெற்று இருப்பதால் அமாவாசையன்று முன்னோர்களை வழிபட முத்தாய்ப்பான மாற்றங்கள் உண்டு.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    மிதுனம்

    வார ராசிப்பலன்

    இந்த வாரம் எப்படி 16-5-2022 முதல் 22-5-2022 வரை

    பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்ரன் 10-ல் உச்சம் பெற்றதால் வாழ்நாள் லட்சியமாக எதிர்பார்த்த பதவி தேடி வரும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு நலம் தரும். தொழில் உத்தியோக நிமித்தமாக பிரிந்து வாழ்ந்த தம்பதிகள் சேர்ந்து வாழும் சந்தர்ப்பம் கூடி வரும். குடும்ப ஸ்தானத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் உறவுகளால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும்.

    குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும். பாக்கிய ஸ்தானத்தில் சனி ஆட்சி பலம் பெற்றதால் தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். குடும்பத்தை விட்டுப் பிரிந்த வாரிசுகள் வீடு வந்து சேருவார்கள். 20.5.2022 காலை 8.45 முதல் 22.5.2022 காலை 11.12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணியாளர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும் அல்லது அவர்களால் சிறு பொருள் விரயம் ஏற்படும். மற்றவர்களிடம் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×