என் மலர்tooltip icon

    மகரம்

    ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

    காரியவாதியான மகர ராசியினருக்கு ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். ஜென்மச் சனியின் தாக்கம் குறைந்ததால் சிந்தனை களின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். புதிய தெளிவான சிந்தனைகளின் மூலம் முடிவுகளை எடுப்பீ ர்கள். இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். லட்சியத்தை அடைய அதிகம் உழைக்க நேரும். வாழ்வில் முன்னேறுவ தற்கான முயற்சியை மேற் கொண்டு வெற்றி பெறுவீர்கள். இந்த புத்தாண்டில் வருட கிரகங்க ளின் சஞ்சாரம் சற்று சுமாராக உள்ளது. இனி விரிவான பலன்களைக் காணலாம்.

    குருவின் சஞ்சார பலன்கள்:

    மகர ராசிக்கு 3,12ம் அதிபதியான குரு பகவான் ஏப்ரல் 22, 2023 வரை ராசிக்கு 3ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு 4ம்மிடம் சென்று ராகுவுடன் இணைந்து சனி பார்வை பெறுகிறார். செய் தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும் .தாய் வழி உறவினர்களிடையே அன்பு ஆதரவு முழு ஒத்துழைப்பு ஏற்படும். தாய் வழி உறவினர்களிடையே இருந்த கருத்து வேறுபாடு மறையும். தாய் வழி சொத்தில் இருந்த பகைமை மறையும். வீடு, மனை, வாகன யோகம் பெறுவீர்கள. கடன் வாங்கியாவது சொந்த வீடு வாங்கி விடுவீர்கள். பழைய வண்டி வைத்து இருப்பவர்கள் எக்சேன்ஜ் ஆபரில் புதிய வண்டி வாங்குவீர்கள். வண்டி இல்லாதவர்கள் புதிய வண்டி வாங்குவீர்கள். இரு சக்ர வாகனம் வைத்து இருப்பவர்கள் கார் வாங்குவீர்கள்.

    கண் திருஷ்டி, போட்டி-பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால் மனவருத்தங்கள் ஏற்படும். நிலையாக ஒரே இடத்தில் இருக்க முடியாமல் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்து கொண்டே இருப்பார்கள்.அலைச்சல் மிகுந்த பயணத்தை தரும் வேலை அல்லது தொழில் செய்ய நேரும். சகோதர, சகோதரிகள் உதவியாக அன்பாக, ஆதரவாக இருப்பார்கள்.சில முக்கிய சம்பவங்கள் பாதகமாக இருப்பது போல் தோன்றினாலும் முடிவில் நன்மையாகவே இருக்கும். புதிய முடிவுகளை எடுக்கும் முன்பு பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும்.

    சனியின் சஞ்சார பலன்கள்:

    மகர ராசிக்கு ராசி மற்றும் 2ம் அதிபதியான சனி பகவான் ஜனவரி17, 2023 வரை ஜென்ம ராசியில் சஞ்சரிக்கிறார். அதன் பிறகு 2ம் இடமான தன ஸ்தானம் செல்கிறார்.எந்த செயலிலும் துணிவு, தைரியம்,ஆற்றல் உண்டாகும். உங்களின் திறமை வெளிப்படும். அதனால் நற்பெயரும் கிடைக்கும் செல்வமும், சேமிப்பும் உயரும்.

    பிறரின் சொத்து, செல்வம், திடீர் தன யோகம் அல்லது புதையல் கிடைக்கும். பொன், பொருள் சேர்க்கை ஏற்படும். ஆயுள் பலம் உண்டு. தந்தையின் அனுசரணை உண்டு. பூர்வீக சொத்து தொடர்பான சர்ச்சைகள் . வழக்குகள் ஏதேனும் இருந்தால் அவற்றில் சாதகமான முடிவு வரும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். தீர்த்த யாத்திரை, பூஜைகள் ஆகிய புண்ணிய காரியங்களில் அதிகமாக ஈடுபாடு உருவாகும்.தொழில் நிலை மிகச் சிறப்பாக உள்ளது. வங்கி , ஆசிரியர்கள், சாஸ்திரம் தொடர்பான பணி, கணக்கெழுதுவோர் ஆகியோர் பெரும் லாபம் அடைவர். கூட்டுத் தொழில் புரிவோர் சற்று கவனமுடன் இருக்க வேண்டும்.

    அரசு பணியாளர்கள், அயல் நாட்டில் பணிபுரிவோர்ககளுக்கும் நல்ல முன்னேற்றம் சேமிப்பு உயரும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.கெளரவமான உத்தியோகம் / பதவி கிடைக்கப் பெறுவார். சிறிய பதவியில் இருப்பவர் கூட படிப்படியாக உயர்ந்து நிர்வாக பொறுப்பு நிலைக்கு உயரக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். இதே நிலையை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொள்ள வேலை பார்க்கும் இடத்தில் உடன் வேலை பார்ப்பவர்கள் மற்றும் எதிரிகளால் வரும் தொல்லையை பொருட்படுத்தக்கூடாது.சகல காரியங்கள் சித்தி பெறும்.

    ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்:

    வருட துவக்கத்தில் ராகு பகவான் 4ம் இடத்திலும், கேது பகவான் பத்தாமிடத்திலும் சஞ்சரிக்கிறார். அக்டோபர் 30, 2023ல் பெயர்ச்சி யாகி ராகு 3ம் மிடத்திற்கும் கேது 9ம் மிடமும் செல்கிறார்கள்.இதுவரை உலகுக்கு தெரியாமல் இருந்து வந்த உங்களுடைய திறமைகள் அனைவருக்கும் தெரியவரும் . தங்களின் செயல் திறனில் மாற்றம் ஏற்பட்டு லகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். இளைய சகோதரத்தின் மூலம் நிலவி வந்த கருத்து வேறுபாடு பிப்ரவரி மாதத்திற்கு பின் முடிவுக்கு வரும். சகோதரத்திற்கு பொருளாதார நெருக்கடி இருக்கும். அவருடை பொருளாதார நெருக்கடியை சரி செய்யும் கடமை உங்களுக்கு இருப்பதை உணர்ந்து செயல்படுவீர்கள். கடன் சுமை குறையும். வம்பு வழக்குகள் எதிர்பாராத வெற்றியைத் தரும். பணம் தொடர்பான வழக்குகள் இருந்தால் தள்ளுபடியாகும்.

    நீண்ட நாட்களாக ஏதாவது நோய்க்கு சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தால் இப்பொழுது ஆரோக்கியம் ஏற்படும் . யோகா மெடிடேசன், பிராணயாமம் கை கொடுக்கும். இயற்கை வைத்தியம் நல்ல பலன் தரும்.

    திருமணம்: ஜென்ம ராசியை விட்டு சனி பகவான் நகர்வதால் திருமண வயதில் உள்ள ஆண் பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். மேலும் நின்று போன திருமணங்கள் இனி சுலபமாக நடைபெறும். திருமணத் தடை அகலும். ஏப்ரலுக்கு மேல் எட்டாம் இடத்திற்கு குருப் பார்வை கிடைப்பதால் சுய ஜாதகத்தில் மாங்கல்ய தோஷத்தால் திருமணம் தடைபட்ட பெண்களுக்கு வரன் கூடிவரும்.

    பெண்கள்: பெண்களுக்கு அழகு, ஆடம்பர பொருட்கள், தங்க நகைகள் கிடைக்கும்.உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு.சிலரின் காதல் கலப்பு திருமணம் தோல்வியில் முடியும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும்.தாயின் அன்பும் அரவணைப்பும் பெருகும். தாய் வழி சொத்தில் உள்ள கொடுக்கல் வாங்கல் பிரச்சனை சுமூகமாக தீரும்.

    மாணவர்கள்: குரு 4ம்மிடம் செல்வதால் குழந்தைகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். சுமாராக படித்த மாணவர்கள் படிப்பில் நல்ல கவனம் செலுத்தி அதிக மதிப்பெண் பெறுவார்கள். கல்வியில் தடை ஏற்பட்டு இருந்தால் மீண்டும் தொடர வாய்ப்பு ஏற்படும். 10ம் வகுப்பு 12ம் வகுப்பு படிக்கும் மகர ராசி மாணவர்கள் மாநில , மாவட்ட, பள்ளி அளவில் முதல் மாணவ மாணவியராக தேர்ச்சி பெறுவார்கள். சிலர் பள்ளி மாறலாம்.

    உத்திராடம் 2 ,3,4: அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான காலம். வேலையாட்களிடம் நிலவி வந்த குழப்பம் மறையும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். தொழிலில் நிலவிய தடை தாமதங்கள் அகலும்.

    வாகனத்தில் செல்லும் போது நிதானம் தேவை. கணவன் மனைவி உறவில் சிறு விரிசல் தோன்றி மறையும். நினைத்த காரியங்கள் அலைச்சலுடன் நிறைவேறும். வாக்கு வன்மை பெறும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். வரவும் செலவும் சமமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளி மாநிலம் சென்று வேலை பார்க்கும் அமைப்பு ஏற்படும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் தாமத பலன் உண்டு. விவசாயிகள் கிணறு தோண்ட ஏற்ற நேரம். அடிமைத் தொழிலில் இருப்பவர்களுக்கு சொந்தத் தொழில் செய்யும் சூழல் உருவாகும். திறமைக்குத் தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். குழந்தைகளை சிரத்தையோடு கண்காணிக்கவும்.

    பரிகாரம்:புரோகிதர்கள், அந்தணர்களுக்கு சனிக்கிழமை களில் கருப்பு. முழு உளுந்து தானம் தர உடனடி பலன் கிடைக்கும்.

    திருவோணம்: புதிய முயற்சிகளில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய காலம். குடும்பத்தில் நிம்மதியான நிலை நீடிக்கும். தன வரவில் தாமதம் இருந்தாலும் தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். அழகு ஆடம்பரப் பொருட்கள், உணவுத் தொழில் செய்பவர்களுக்கு நன்மைகள் தொடரும்.

    திரைப்பட கலைஞர்களுக்கு தடைகளைத் தாண்டிய வெற்றி உண்டு.கிடப்பில் கிடந்த வழக்கு,விவகாரங்கள் மீண்டும் தலை தூக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் நல்ல மாற்றமும் ஏற்றமும் தேடி வரும். ரியல் எஸ்டேட், ஒப்பந்த தொழில் புரிபவர்கள் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த பலன் உண்டு. கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு கூடுதலான நன்மைகள் உண்டு. எட்டாம் இடத்திற்கு சனி பார்வை இருப்பதால் தொழிலில் உங்களை கவிழ்க்க நண்பர்கள் போல் நடித்து கால் வாரிவிடுவார்கள். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயர நேரலாம்.காது,மூக்கு, தொண்டை தொடர்பான உடல் உபாதைகள் சிரமம் தரும்.

    பரிகாரம்: வயது முதிர்ந்த பெரியோர்களுக்கு உணவு,உடை தானம் தந்து நல்லாசி பெற வேண்டும்.

    அவிட்டம் 1 ,2: அதிர்ஷ்ட தேவதை அரவணைக்கும் காலம்.நினைப்பதெல்லாம் நடைபெறும் அற்புதமான நேரம். நண்பர்கள் மூலமாக ஆதாயமும் காரிய சித்தியும் உண்டாகும். தொழிலில் லாபமும் ஏற்றமும் உறுதி. கையிருப்பில் இருக்கும் சரக்குகளின் மதிப்பு உயரும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கெளரவம், பணபலம் உயரும். முக்கியமான செயல்களைத் தெளிவாக செய்வதன் மூலம் மதிப்பு கூடும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். அண்டை அயலாருடன் இணக்கமான சூழல் உண்டாகும்.

    பரிகாரம்: சனிக்கிழமை எட்டு பேருக்கு எள்ளுருண்டை தானம் தர வேண்டும்.

    மகர ராசியினர் புத்தாண்டிற்கு சென்று வழிபட வேண்டிய ஸ்தலம் மதுரை மீனாட்சி அம்மன் கோவில். மகர ராசியினர் இந்த புத்தாண்டில் புதன் அம்சம் நிறைந்த மதுரை மீனாட்சியை வழிபட சகல ஐஸ்வர்யங்களும் பெருகும்.

    ×