என் மலர்tooltip icon

    மகரம்

    வார ராசிபலன் 5.10.2025 முதல் 11.10.2025 வரை

    5.10.2025 முதல் 11.10.2025 வரை

    சிறிய முயற்சியில் பெரிய வெற்றி கிடைக்கும் வாரம். ராசிக்கு செவ்வாயின் நான்காம் பார்வை உள்ளது. குரு பகவான் அதிசாரமாக கடக ராசியில் சென்று உச்சமடைய போகிறார். செவ்வாய் சாதகமான இடத்தில் சஞ்சரிப்பதால் பங்கு தாரருடன் இணைந்து தொழிலுக்கு சொந்தமான இடம் வாங்க ஏற்ற நேரம். புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பரம்பரை சொந்தத் தொழிலில் நீங்கள் பங்குதாராக இணையலாம்.

    நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துக்கள் விற்கும். அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு அப்பாயின்மென்ட் ஆர்டர் வரும். தீபாவளிக்கு தேவையான உடைகளை வாங்கும் முயற்சியில் ஈடுபடுவீர்கள். பொன் பொருள் சேரும். சிலருக்கு தந்தையின் அரசு வேலை கிடைக்கும். பெண்கள் மாமனார், மாமியாரை அனுசரித்துச் செல்ல வேண்டும்.

    திருமணம் நிச்சயமானவர்கள் போனில் தேவையற்ற விசயங்களை தவிர்க்கவும். வரவிற்கும் செலவிற்கும் சரியாக இருக்கும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு மதிப்பு, மரியாதை உயரும். தினமும் காலபைரவரை வழிபடுவதால் காலத்தால் ஏற்படக்கூடிய துன்பங்கள் விலகும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×