என் மலர்
மகரம்
வார ராசிபலன் 26.10.2025 முதல் 1.11.2025 வரை
26.10.2025 முதல் 1.11.2025 வரை
மகரம்
குரு பலத்தால் காரியம் சாதிக்க வேண்டிய வாரம். ராசிக்கு 10ம்மிடமான தொழில் ஸ்தானத்தில் அஷ்டமாதிபதி சூரியன் நீச்சமாக உள்ளார். சூரியனுக்கு வீடு கொடுத்த சுக்கிரன் நீச்சம். மகர ராசியினருக்கு தற்போது குரு மற்றும் செவ்வாயின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது. இதனால் திடமான நம்பிக்கையும், தெம்பும், உற்சாகமும் அதிகரிக்கும்.
இடமாற்றம் பற்றிய சிந்தனைகள் மேலோங்கும். வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும். புதிய வெளிநாட்டு ஒப்பந்தம் கிடைக்கும். இளைய சகோதரத்திற்கு கொடுத்த பணம் வசூலாகும். அடமான நகைகளை மீட்கக் கூடிய சந்தர்ப்பம் உருவாகும். அசையும், அசையாச் சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
பழைய வீட்டை புதுப்பித்து பொலிவு பெறச் செய்வீர்கள். கைமறதியாக வைத்த நகைகள், முக்கிய ஆவணங்கள் தென்படும். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவீர்கள். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தலைக்கு வந்த அனைத்தும் தலைப்பாகையோடு சென்று விடும். கந்த சஷ்டி அன்று முருகனை வழிபட்டு தேவையற்ற எண்ணங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






