என் மலர்tooltip icon

    மகரம்

    வார ராசிபலன் 16.11.2025 முதல் 22.11.2025 வரை

    16.11.2025 முதல் 22.11.2025 வரை

    மகரம்

    தன்னம்பிக்கை அதிகரிக்கும் வாரம். ராசிக்கு அதிசார வக்ர குருவின் சமசப்தம பார்வை உள்ளது. இறை வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடும். வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. திருமணம், குழந்தை பேறு, வேலை வாய்ப்பு சொத்துச் சேர்க்கை போன்றவற்றில் நிலவிய தடைகள் அகலும். புதிய பொறுப்புகளையும் சவால்களையும் சந்திக்க நேரிடும்.

    உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் ஏற்பட்ட இன்னல் தீரும். தொழில், உத்தியோக நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். பத்திரிக்கை நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகளின் பங்குகளில் நீண்ட கால முதலீடு செய்ய உகந்த காலம். பூர்வீகச் சொத்தில் நிலவி வந்த சர்ச்சைகள் முடிவுக்கு வரும். வாலிப வயதினர் காதல் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

    கடந்து வந்த காலங்களில் நடந்த எதிர்மறையான சம்பவங்களை மறந்து நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொண்டால் வாழ்க்கை வளமாகும். குல தெய்வ, இஷ்ட தெய்வ பிரார்த்தனைகளை நிவர்த்தி செய்வீர்கள். ஞாயிற்றுக் கிழமைகளில் துர்க்கை அம்மனை வழிபடவும்.

    'பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×