என் மலர்tooltip icon

    மகரம்

    2025 மாசி மாத ராசிபலன்

    விட்டுக்கொடுத்துச் செல்லும் குணம் படைத்த மகர ராசி நேயர்களே!

    மாசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, உங்கள் ராசிநாதன் சனி, அஷ்டமாதிபதி சூரியனோடு இணைந்து சஞ்சரிக்கிறார். குடும்ப ஸ்தானத்தில் சனி இருப்பதால் குடும்பச் சுமை கூடும். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டு இதயத்தை வாட வைக்கும். புதிய முயற்சிகளில் மற்றவர்களை நம்பி செயல்பட இயலாது.

    பொறுப்புகளை சொல்வதால் சிக்கல்கள் ஏற்படும். துரிதமாக முடிவடைய வேண்டிய காரியங்கள் கூட இழுபறி நிலையில் இருக்கும். இக்காலத்தில் சனிக்குரிய சிறப்பு தலங்களுக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று வழிபட்டு வருவது நல்லது.

    சூரியன் - சனி சேர்க்கை

    இந்த மாதம் முழுவதும் கும்ப ராசியில் சூரியன் - சனி சேர்க்கை ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு அஷ்டமாதிபதி சூரியன், தனாதிபதி சனியோடு சேரும் இந்த நேரத்தில், மிகுந்த கவனத்தோடு செயல்பட வேண்டும். பொருள் விரயங்களும், புதிய முயற்சிகளில் போராட்டங்களும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடித்தாலும், அவற்றில் திருப்தி இருக்காது. எதையும் ஒரு முறைக்கு இரு முறை செய்யும் சூழல் உருவாகும்.

    'நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியவில்லையே' என்ற கவலை அதிகரிக்கும். பொருளாதாரத்தில் பற்றாக்குறை ஏற்பட்டு, பல பணிகள் பாதியிலேயே நிற்கும். குடும்பத்தில் பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கலாம். எவ்வளவுதான் நீங்கள் விழிப்புணர்ச்சியாக செயல்பட்டாலும் விரயங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

    செவ்வாய் வக்ர நிவர்த்தி

    மிதுன ராசியில் சஞ்சரிக்கும் செவ்வாய், மாசி 9-ந் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். உங்கள் ராசிக்கு 4, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் செவ்வாய். அவர் வக்ர நிவர்த்தியாவது நன்மைதான். தாய் வழி ஆதரவு கிடைக்கும். இடம், பூமி வாங்கும் யோகம் உண்டு. எதையும் திட்டமிட்டு செய்து வெற்றி காண்பீர்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்த வண்ணமாக இருக்கும்.

    எதிர் காலத்தை பற்றிய பயம் அகலும். இயற்கையிலேயே எல்லா வழிகளிலும் நன்மை கிடைக்கும் நேரம் இது. இருப்பினும் ஏழரைச் சனியின் ஆதிக்கம் நடைபெறுவதால் ஒரு சில சமயங்களில் மனக் குழப்பங்களும் உடல் சோர்வும் ஏற்படலாம். அதனால் ஒருசில காரியங்களை தள்ளி வைக்க நேரிடும்.

    மீன - புதன் சஞ்சாரம்

    மாசி 14-ந் தேதி மீன ராசிக்குச் செல்லும் புதன், அங்கு நீச்சம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 6, 9 ஆகிய இடங்களுக்கு அதிபதியானவர் புதன். 6-க்கு அதிபதி நீச்சம் பெறுவது நன்மைதான். என்றாலும் அவர் 9-க்கும் அதிபதியாக விளங்குவதால் ஒரு சில சமயங்களில் மனக்குழப்பம் ஏற்படும்.

    நன்மையும், தீமையும் கலந்து நடைபெறும் இந்த நேரத்தில், நன்மைகளை மட்டுமே சந்திக்க வேண்டுமானால் புதனுக்குரிய வழிபாடுகள் உங்களுக்கு தேவை. அனுகூலம் தரும் நாளில் பெருமாள் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். கொடுக்கல் - வாங்கல்களில் கவனம் தேவை. வெளிநாட்டு முயற்சி தாமதப்படும்.

    பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர் களுக்கு கணிசமான தொகை கைகளில் புரளும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் கிடைக்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மாணவ - மாணவிகளுக்கு மந்த நிலை மாறும். சிந்தனைகள் வெற்றி பெறும். பெண்களுக்கு குடும்பத்தினரின் அனுசரிப்பு குறையும். விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

    பணத்தேவையை பூர்த்தி செய்யும் நாட்கள்:-

    பிப்ரவரி: 16, 17, 21, 22, 28, மார்ச்: 1, 4, 5.

    மகிழ்ச்சி தரும் வண்ணம்:- பச்சை.

    ×