என் மலர்tooltip icon

    மகரம் - இன்றைய ராசி பலன்கள்

    மகரம்

    இன்றைய ராசிபலன் -28 அக்டோபர் 2024

    சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பிறருக்கு நன்மை செய்தாலும் அது தீமையாகத் தெரியும். தொழிலுக்காக எடுத்த முயற்சியில் தாமதம் ஏற்படும். எதிலும் தீர்க்கமான முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -27 அக்டோபர் 2024

    கவனிக்காது விட்ட உடல்நலத்தால் கவலை அதிகரிக்கும் நாள். தொழில் உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் தொல்லைகள் உண்டு. மனக்குழப்பம் அதிகரிக்கும். வரவைவிட செலவு கூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 26 அக்டோபர் 2024

    மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அதிகரிக்கும் நாள். எதையும் யோசித்துச் செய்வது நல்லது. குடும்பத்தில் கருத்து வேறுபாடு கள் அதிகரிக்கும். எதிர்பாராத விதத்தில் விரயம் உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -25 அக்டோபர் 2024

    நீண்ட நாளைய எண்ணங்கள் நிறைவேறும் நாள். நேற்று செய்யாமல் விட்ட வேலையொன்று இன்று முடிவடையும். உடன்பிறப்புகள் மூலம் செய்த உத்தியோக முயற்சி வெற்றி தரும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -24 அக்டோபர் 2024

    நல்ல காரியம் இல்லத்தில் நடைபெறும் நாள். தனவரவில் இருந்த தடைகள் அகலும். தொழிலில் புதிய முதலீடுகள் செய்யும் சிந்தனை மேலோங்கும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -23 அக்டோபர் 2024

    பணப்புழக்கம் அதிகரிக்கும் நாள். புதிய நபர்களின் அறிமுகத்தால் தொழில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களுக்கு இடையூறாக இருந்தவர்கள் இடமாறுதலாகிச் செல்வர்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -22 அக்டோபர் 2024

    வளர்ச்சி கூடும் நாள். வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். திடீர் பயணம் பலன் தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் உயர்வு உண்டு.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -21 அக்டோபர் 2024

    இடமாற்றச் சிந்தனை மேலோங்கும் நாள். இல்லத்தினர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்பப் பொறுப்புணர்ந்து நடந்து கொள்வர். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -20 அக்டோபர் 2024

    எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். உற்றார், உறவினர்களின் ஒத்துழைப்பு உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்குரிய சம்பவமொன்று நடைபெறும். வெளியுலகத் தொடர்புகள் விரிவடையும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் - 19 அக்டோபர் 2024

    மனக்குழப்பம் அகலும் நாள். பொருளாதார விருத்தி ஏற்படும். மறைமுக எதிர்ப்புகளைச் சமாளிப்பீர்கள். அக்கம், பக்கத்து வீட்டாரின் அன்புத் தொல்லைகள் வந்து போகும். ஆரோக்கியம் சீராகும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -18 அக்டோபர் 2024

    ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும் நாள். தொழில் வளர்ச்சிக்கு உறவினர்கள் கைகொடுத்து உதவுவர். அக்கம் பக்கத்து வீட்டாரிடம் ஏற்பட்ட பகை மாறும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும்.

    மகரம்

    இன்றைய ராசிபலன் -17 அக்டோபர் 2024

    முயற்சியில் வெற்றி கிட்டும் நாள். பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் முடிவாகும். தொழில் வளர்ச்சிக்கு முக்கியப் புள்ளிகளை சந்தித்து முடிவெடுப்பீர்கள். பணத் தேவைகள் எளிதில் பூர்த்தியாகும்.

    ×