என் மலர்tooltip icon

    கடகம்

    வார ராசிபலன் 28.9.2025 முதல் 4.10.2025 வரை

    28.9.2025 முதல் 4.10.2025 வரை

    புதிய நம்பிக்கை பிறக்கும் வாரம். கடக ராசிக்கு வெற்றி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் புத ஆதித்ய யோகம் ஏற்படுகிறது. கடக ராசியினருக்கு இது வாழ்வியல் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய சிறந்த யோகமாகும். புதிய தெளிவும் நம்பிக்கையும் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய குழப்பங்கள் முற்றுப் புள்ளியாகும். தம்பதிகளிடையே சுமூக உறவு நிலவும்.

    முன்னோர்களின் நல்லாசியும், குல தெய்வ அருளும் கிடைக்கும். தொழில் உத்தியோக அனுகூலம் நல்ல விதமாக இருக்கும். பிள்ளைகளின் சுப நிகழ்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். இழந்த பதவி தேடி வரும். விருப்ப விவாகத்திற்கு பெற்றோர் சம்மதம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் அதிர்ஷ்டம் சார்ந்த விஷயங்களில் ஆதாயம் கூடும்.

    3.10.2025 இரவு 9.27-க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் புதிய முயற்சிகள் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. கை, கால் வலி, அலைச்சல் போன்ற சிறுசிறு அசவுகரியங்கள் இருக்கும். புரட்டாசி மாதத்தில் மகாவிஷ்ணுவை வழிபடுவதால் சர்ப்ப தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×