என் மலர்tooltip icon

    கடகம்

    வார ராசிபலன் 15.6.2025 முதல் 21.6.2025 வரை

    15.6.2025 முதல் 21.6.2025 வரை

    சுப விரயம் உண்டாகும் வாரம். விரய ஸ்தானத்தில் குரு, புதன் சூரியன் சேர்க்கை இருப்பதால் மனதின் வேகத்தைப் போல் செயல் வேகமும் அதிகரிக்கும். உங்கள் எண்ணங்களும் திட்டங்களும் நிறைவேறும். மன அழுத்தத்தை வெற்றி கொள்வதற்கு ஆன்மீகம் தான் சிறந்தது என்பதை உணர்வீர்கள். பணம், அன்பு, குடும்பம் ஆகியவற்றிலிருந்து விலகி ஆன்மீக மார்க்கத்தில் இணைய மனம் லயிக்கும்.

    வீடு, மனை, வாகனம் மற்றும் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கு கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். திருமணப் பேச்சு வார்த்தைகள் நடக்கும். விட்டுக் கொடுத்து வாழ்வது தான் திருமண வாழ்க்கை என்பதை உணர்வீர்கள். உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் திறமைக்கு சில புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.

    16.6.2025 அன்று பகல் 1.10 முதல் 18.6.2025 அன்று பிற்பகல் 6.35 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மந்த தன்மையுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு கைகால், மூட்டுவலி போன்ற சிறு, சிறு உடல் உபாதைகளால் சோர்வு மிகுதியாகும். தினமும் சிவ கவசம் படிக்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×