என் மலர்
கடகம் - வார பலன்கள்
கடகம்
வார ராசிபலன் 30.3.2025 முதல் 5.4.2025 வரை
30.3.2025 முதல் 5.4.2025 வரை
நிம்மதியான வாரம். அஷ்டமச் சனி உங்களுக்கு காட்டிய பயம் குறைவு தான். ஆனால் தகவல் தொடர்பு சாதனங்க ளில் ராசி பலன் கூறி படுத்திய பாடு சொல்லி மாளாது. இனி எதற்காகவும் கவலைப் படாமல் நிம்மதியாக இருக்கலாம். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வருமானம் கூடும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் யோகம் தொடர்பான பணிகள் நடக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள்.கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும்.
சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிசேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
30.3.2025 முதல் 05.4.2025 வரை
நிம்மதியான வாரம். அஷ்டமச் சனி உங்களுக்கு காட்டிய பயம் குறைவு தான். ஆனால் தகவல் தொடர்பு சாதனங்களில் ராசி பலன் கூறி படுத்திய பாடு சொல்லி மாளாது. இனி எதற்காகவும் கவலைப்படாமல் நிம்மதியாக இருக்கலாம். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். வருமானம் கூடும். புதிய வருமான வாய்ப்புகள் தேடி வரும். வியாபாரத்தில் நல்ல லாபங்கள் கிடைக்கும். வீடு, வாகனம் யோகம் தொடர்பான பணிகள் நடக்கும். பிள்ளைகளுடன் வெளியூர் பயணங்கள் சென்று மனம் மகிழ்வீர்கள்.
கணவன் மனைவி நெருக்கம் அதிகரிக்கும். உடல் நிலையில் நல்ல மாற்றம் உண்டாகும். சமூக பணிகளில் பலதரப்பட்ட மக்களின் அறிமுகமும் ஆதரவும் உருவாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். சொத்துக்கள் மூலம் அனுகூலமான சூழ்நிலை காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். மனதை உறுத்தி வந்த கவலைகள் நீங்கி புத்துணர்வுடன் காணப்படுவீர்கள். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 23.3.2025 முதல் 29.3.2025 வரை
23.3.2025 முதல் 29.3.2025 வரை
ஆனந்தமான வாரம். ராசியை எந்த கிரகமும் பார்க்க வில்லை. அஷ்டமச் சனி முடிவிற்கு வரப்போகிறது. துயரங்கள் அகலும் உடலில் இருந்த பிணிகள் அகலும். சிகிச்சை பலன் தரும். உற்சாகமாக பணிபுரிவீர்கள். அசையாச் சொத்துகள் அமையும். தடைபட்ட வீடு கட்டும் பணி துரிதமாகும். அலுவலகத்தில் வழங்கப்பட்ட கூடுதல் பொறுப்பு, பணிகளை முடிக்க சக ஊழியர்கள் உதவுவார்கள். வணிகர்களுக்கு இந்த வாரம் வழக்கத்தை விட அதிகமாக வியாபாரம் நடக்கும்.இந்த வாரத்தில் வரன் அமைந்து விடும்.
வைகாசியில் திருமணம் நடக்கும். இனி தொழிலில் அதிக லாபம் கிடைக்கும். வெளியூர், வெளிநாட்டு வேலை முயற்சி கைகூடும்.பாகப்பிரிவினைகள் சாதகமாகும். சகோதர சகோதரிகள் மீண்டும் நட்பாகுவார்கள்.பெற்றோரை பிரிந்த பிள்ளைகள் மீண்டும் வந்து இணைவார்கள்.குழந்தைகளின் முன்னேற்றம் மகிழ்ச்சி தரும். 26.3.2025 அன்று மாலை 3.14 முதல் 28.3.2025 மாலை 4.47 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.ஞாபக சக்தி குறையும். அமாவாசையன்று கற்பக விநாயகரை வழிபட வளர்ச்சிகள் அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 16.3.2025 முதல் 22.3.2025 வரை
16.3.2025 முதல் 22.3.2025 வரை
எண்ணங்களும் லட்சியங்களும் நிறை வேறும் வாரம். 9-ம்மிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் 4 கிரகச் சேர்க்கை ஏற்பட்டு இருப்பதால் அதிர்ஷ்ட மும், பேரதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். சேமிப்புகள் உயரும். காரியத் தடை அகலும். முயற்சிகளுக்கான பலன்களை உடனடியாக காண முடியும். உறவுகளின் உழைப்பை, ஆதரவை சார்ந்தே வாழ்ந்தவர்களுக்கு முன்னேற்றப் பாதை தென்படும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த வளர்ச்சி ஏற்பட்டு வருமானம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். ஆரோக்கிய குறைபாடு அகலும்.
வாழ்க்கைத் துணைக்கு கவுரவப் பதவிகள், அரசு உத்தியோகம் கிடைக்கும். தம்பதிகளிடம் நிலவிய ஈகோ தணியும். திரு மணத்திற்கு நல்ல வரன் அமையும். மறு திருமண முயற்சி வெற்றி தரும். வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும்.ஆரோக்கியத்தில் கவனம் தேவை. முக்கியமில்லாத பணப்பரி வர்த்தனைகளைத் தவிர்க்கவும். நிலைமையைப் புரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்பட்டால் வெற்றி மேல் வெற்றி வந்து சேரும். தினமும் அம்பிகையை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 9.3.2025 முதல் 15.3.2025 வரை
9.3.2025 முதல் 15.3.2025 வரை
மன நிறைவான வாரம். அஷ்டமச் சனியின் தாக்கம் குறையும். லாப குருவினால் நன்மைகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த கவலைகள் அகலும்.என்ன செய்வதென்று தெரியாமல் இருளில் திக்கு, திசை தெரியாமல் தடுமாறியவ ர்களுக்கு முன்னேற்ற பாதை தென்படும். சவாலான காரியங்களைக் கூட எளிதாக முடிப்பீர்கள். பல வருடமாக தீராமல் இருந்த பிரச்சினைகளுக்கு முடிவு தெரியும். கடகத்திற்கு பொற்காலம் ஆரம்பமாகி விட்டது. எந்த நன்மையை எழுதுவது, எந்த நன்மையை விடுவது என்றே தெரியவில்லை.
சிலருக்கு இழந்த பதவிகள் கிடைக்கும். அரசியல் வாதிகளுக்கு மேலிடத்தின் ஆதரவு கிடைக்கும். பங்குச் சந்தை முதலீட்டில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணப் பேச்சுவார்த்தை நல்ல முடிவிற்கு வரும். வீடு, வாகனம் முயற்சிகள் கைகூடும். திருமணமான தம்பதிகள் மகிழ்சியாக குடும்பம் நடத்துவார்கள். சிலருக்கு மறுமணம் நடக்கும். கடன் பிரச்சினையில் இருந்து முற்றிலும் நிவாரணம் கிடைக்கப் பெறுவீர்கள். சிலருக்கு பூர்வீகம் சென்று செட்டிலாகும் வாய்ப்பு உள்ளது. காதல் திருமண முயற்சி சித்திக் கும். மாசி மகத்தன்று சிவசக்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 02.03.2025 முதல் 08.03.2025 வரை
02.03.2025 முதல் 08.03.2025 வரை
தன்னம்பிக்கையும், துணிவும் அதிகரிக்கும் வாரம். சனி பகவானைத் தவிர ஏனைய கோட்சார கிரகங்கள் சாதகமாக உள்ளது. கோட்சார அமைப்பின் கெடுதல்கள் விலகுவதால் திருமணத் தடை அகலும். சிரமமான கடுமையான காரியங்கள் கூட எளிமையாக நடந்து முடியும்.
நீண்டகால பிரார்த்தனைகள், வேண்டுதல்களை நிறைவேற்ற ஏற்ற நேரம். தொழில் நிமித்தமாக வெளியூரில் வசித்தவர்கள் விரும்பிய இடமாற்றம் கிடைத்து குடும்பத்துடன் இணையக் கூடிய அற்புதமான காலம். வேலைப் பளு குறைந்து நிம்மதியுடன் இருப்பீர்கள்.
சொந்த பந்தங்களுடன் இணைந்து விருந்து உபச்சாரங்களில் கலந்து ஆனந்தம் அடைவீர்கள். பேச்சை மூலதனமாக கொண்ட விற்பனை பிரதிநிதிகள், வக்கீல்கள், ஆசிரியர்களுக்கு வருமானம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும்.
பெண்களுக்கு மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். பெண்களுக்கு குழந்தைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்களின் மனமறிந்து நடந்து கொள்வார்கள். உடல் நிலை சீராக இருக்கும். மனதிற்கு இனிமை தரும் இடமாற்றங்கள் கிடைக்கும். தினமும் சந்திர தரிசனம் செய்யவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 23.2.2025 முதல் 01.03.2025 வரை
23.2.2025 முதல் 01.03.2025 வரை
குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் நிறைந்திருக்கும் வாரம். வெகு விரைவில் அஷ்டமச் சனி முடிவிற்கு வரப்போகிறது. எனினும் மே 18-ல் ராகு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு வருகிறார். கேது பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானம் செல்கிறார்.
குடும்பத்தில் விட்டுக் கொடுத்து அனுசரித்து சென்றால் குடும்ப பிரச்சனைகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். உறவுகளின் சந்திப்பால் மனக் கவலைகள் அகலும். குடும்ப வருமானம் உயரும். புதிய முயற்சிகளுக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளது.
அரசு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் புரிந்து படிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் கடினமான பணிகளைக் கூட சுலபமாக முடித்து நல்ல பெயர் எடுப்பீர்கள். தொழில் வியாபாரத்தில் நிலவிய பிரச்சனைகள் விலகி வளர்ச்சி அதிகமாகும். சிலருக்கு தொழில் கடன் கிடைக்கும்.
27.2.2025 அன்று 4.37 காலை முதல் 1.3.2025 அன்று 5.44 காலை வரை சந்திராஷ்டமம் உள்ளது. பூர்வீக சொத்து தொடர்பான முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்குப் பிறகு சாதகமாகும். சிவராத்திரியன்று சிவ வழிபாடு செய்து வர தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 16.2.2025 முதல் 22.2.2025 வரை
16.2.2025 முதல் 22.2.2025 வரை
அறிவாற்றல் மெருகேறும் வாரம். வெகு விரைவில் அஷ்டமச் சனி முடிவிற்கு வருவதால் வளமான எதிர்காலம் ஏற்படும். குடும்பத்தில் நிலவிய சிறு சிறு குழப்பங்கள் மறையும். உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நெருக்கடிகள் விலகும்.சமூக அந்தஸ்து உயரும். தடைகள் தகர்ந்து முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் கூடி வரும்.
பிள்ளைகளால் பெருமை சேரும். பணவரவு அதிகரிக்கும் பொற்காலம் என்றால் அது மிகையாது. அடமான நகைகள் மீண்டு வரும். தேவையான உதவிகள் விரும்பிய இடத்தில் இருந்து கிடைக்கும்.வயதானவர்களுக்கு அரசின் உதவித் தொகை கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் சுப காரியங்களை முன்னின்று நடத்தும் கடமையும். தொழில், உத்தியோகம் அனுகூலம் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தரும். தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் உணர்வுப் பூர்வமாக செயல்படாமல் நிதானத்துடன் செயல்பட வேண்டும்.
திருமண வாய்ப்புகள் கூடிவரும்.நோய்த் தாக்கம் குறையும். வெளிநாட்டு வாய்ப்பு தேடி வரும். திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 9.2.2025 முதல் 15.2.2025 வரை
9.2.2025 முதல் 15.2.2025 வரை
முன்னேற்றமான வாரம். விரைவில் அஷ்டமச் சனி முடிவிற்கு வரப்போகிறது. முன்னேற்றத்தில் ஏற்பட்ட தடைகள் அகலும்.கடந்த கால மனக்கசப்புகள் விலகி நிம்மதி பிறக்கும்.இதுவரை எதிர்ப்புகளையும், ஏமாற்றங்களையும் சந்தித்தவர்கள் சாதக மான சூழல் அமைவதையும் பார்க்க முடியும். விரோதிகள் கூட நண்பர்களாக மாறி நன்மை செய்வார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். அரசால் ஆதாயம் உண்டாகும். பணிபுரியும் இடங்களில் ஏற்பட்ட அவப்பெயர் விலகும். இன்னல்களை எதிர்கொள்ளும் மனோதிடம் உருவாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு புதிய நல்ல வாய்ப்புகள் தேடி வரும்.
உழைப்பும் பொறுப்பும் அதிகரிக்கும். கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். சமுதாயத்தில் செல்வாக்கு உயரும்.வீடு, நிலம், தோட்டம் வாங்கும் அமைப்பும் சிலருக்கு உருவாகும். வாடகை வீட்டில் வாழ்ந்தவர்கள் சொந்த வீடு வாங்கி குடியேறுவார்கள். பிள்ளைகளின் திருமணத்திற்கு சீர்வரிசைகள் வாங்குவதில் ஆர்வம் செலுத்துவீர்கள். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகள் சித்தப்பா மூலம் நல்ல ஆதாயம் உண்டு. தைப்பூசத்தன்று பால் அபிசேகம் செய்து முருகனை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 2.2.2025 முதல் 8.2.2025 வரை
2.2.2025 முதல் 8.2.2025 வரை
திட்டமிட்ட காரியம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். ராசிக்கு சூரியன், புதன் பார்வை.கடினமான வேலையும் எளிமையாக முடியும். யோசிக்காமல் செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.சிலருக்கு வேலை மாற்றம், வீடு மாற்றம், தொழில் மாற்றம், ஊர் மாற்றம் போன்றவைகள் ஏற்படலாம். புதிய தொழில் துவங்க திட்டமிடுவீர்கள். அதற்குத் தேவையான நிதி உதவி கிடைக்கும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். உத்தியோகத்தில் நிலவிய தொய்வுகள் அகலும். பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு கூட பணி நீட்டிப்பு வாய்ப்பு கிடைக்கும்.
சொத்துக்கள் விற்பனையில் பெரும் பணம் கிடைக்கும். சுய விருப்ப திருமணம் பெற்றோர்களின் ஒத்துழைப்புடன் நடைபெறும்.கலைத் துறையில் உள்ளவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தம்பதிகளின் இல்லறம் நல்லறமாகும். திருமணத் தடை அகலும்.கவுரவப் பதவிகள் கிடைக்கும். தந்தை மகன் ஒற்றுமை பலப்படும்.உடன் பிறந்தவர்கள் அனைவரும் ஒற்றுமையாக பேசி முறையாக பாகப் பிரிவினைகளை முடிப்பீர்கள்.பெண்களுக்கு சிறு தொழில், சுய தொழில் செய்யும் ஆர்வம் உண்டாகும். தட்சிணாமூர்த்தியை வழிபடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 26.1.2025 முதல் 1.2.2025 வரை
26.1.2025 முதல் 1.2.2025 வரை
சிந்தனையில் ஏற்பட்ட குழப்பம் விலகும் வாரம்.ராசிக்கு சூரியன், புதன் பார்வை. புதிய திருப்பங்கள் ஏற்படும். இழுபறியாக இருந்த முயற்சிகள் இப்பொழுது நிறைவேறும். திட்டமிட்ட காரியங்கள் சிறப்பாக நடைபெறும்.வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் அகலும்.உடலும், மனமும் பொலிவு பெறும். பிள்ளைகளால் நன்மையும், பெருமையும் உண்டாகும். புதிய நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள்.திருமண முயற்சி கைகூடும். பெண்களுக்கு விலை உயர்ந்த பொருட்களின் சேர்க்கை உண்டாகும். அஷ்டமச் சனியால் ஏற்பட்ட ஆரோக்கியக் குறைபாடு அகலும்.
அறுவை சிகச்சை செய்ய வேண்டிய நிலை மாறி சாதாரண வைத்தியத்தில் குணமாகும். சொத்து வாங்கும் முயற்சி சித்திக்கும். சுப விரயங்கள் அதிகரிக்கும்.என்றோ வாங்கிய பங்குகள் இப்பொழுது நல்ல லாபத்தை பெற்றுத்தரும். மாணவர்களுக்கு நல்ல ஞாபக சக்தி கூடும். 30.1.2025 அன்று மாலை 6.35 முதல் 1.2.2025. அன்று இரவு 8.58 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அடிக்கடி இடப் பெயர்ச்சி செய்ய நேரும். அலைச்சல் மிகுதியாகும். தை அமாவாசையன்று புனித நீராடவும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406
கடகம்
வார ராசிபலன் 19.1.2025 முதல் 25.1.2025 வரை
19.1.2025 முதல் 25.1.2025 வரை
படிப்படியான முன்னேற்றமும் முடிவில் வெற்றியும் உண்டாகும் வாரம். ராசிக்கு தனாதிபதி சூரியனின் பார்வை. குடும்பத் தில் நிம்மதி கூடும். தன்னம்பிக்கை தைரியம் நிம்மதி நிலைக்கும். அஷ்டமச் சனியின் காலத்தில் எதையெ தையோ செய்து நஷ்டத்தை அடைந்தவர்களுக்கு பிழைக்கும் வழி தென்படும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு என விரும்பிய மாற்றங்களால் ஏற்றம் உண்டாகும். வாழ்க்கைத் தரம் உயரும். அரசியல், ஆன்மீகம், கலை என அனைத்து துறை திறமைசாலி களும் பிரபலமடைவார்கள். வாழ்க்கை துணைக்கு அரசு வேலை கிடைக்கும். வராக்கடன்கள் வசூலாகும். வீடு, தோட்டம் என அசையாச் சொத்துக்களின் சேர்க்கை மனதை மகிழ்விக்கும்.
மன வேதனையால் முதியோர் இல்லம் சென்ற சில வயது முதிர்ந்தவர்கள் வீடு திரும்புவார்கள். சிலர் வீட்டிற்கு கிரக பிரவேசம் நடத்து வார்கள். திருமணத் தடைகள் அகலும். குழந்தைப்பேறு உண்டாகும். கணவன், மனைவி உறவில் அன்பு மிளிரும். பெண்களுக்கு மகளிர் சுய உதவி குழு மூலம் சிறிய கடன் தொகை கிடைக்கும். எப்பொழுதோ வாங்கி வைத்த பங்குகளின் மதிப்பு உயரும். ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் கழிப்பீர்கள். துர்க்கை வழிபாட்டால் மகிழ்ச்சியை அதிகரிக்க முடியும்.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






