என் மலர்
கடகம்
வார ராசி பலன்கள்
4-7-2022 முதல் 10-7-2022 வரை
மனநிறைவும், நிம்மதியும் அதிகரிக்கும் வாரம். ராசிக்கு குருப் பார்வை கிடைப்பதால் தங்களின் செயல் திறனில்மாற்றம் ஏற்பட்டு இலகுவாக பணியாற்றி நற்பெயர் பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். மருமகன் மகன் ஸ்தானத்தில் நின்று உங்கள் தேவைகளை நிறைவு செய்வார்.
குழந்தைபேறு இல்லாதவர்களுக்கு வாரிசு உருவாகும். லாப சுக்ரனால் ஆபரணச் சேர்க்கை உருவாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.5, 10-ம் அதிபதி செவ்வாய் 10-ல் ஆட்சி பலம் பெறுவதால் அரசு வேலை முயற்சி சாதகமாகும். கூட்டாளிகளிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
சிலருக்கு அதிக தொழில் முதலீடு செய்யக் கூடிய தொழில் பார்ட்னர்கள் கிடைப்பார்கள்.அங்காளி பங்காளி வகையில் நிலவிய மனக்கசப்புகள் விலகும். கணவன், மனைவி கருத்து வேறுபாடு சீராகும். ஸ்ரீ ராமரை பட்டாபிசேக காட்சியில் வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406