என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 8.2.2026 முதல் 14.2.2026 வரை
மேஷம்
தொழில் சார்ந்த வெற்றிகள் தேடி வரும் வாரம். மேஷ ராசிக்கு தனத்தை கொடுக்கக்கூடிய கிரகமான சுக்கிரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்கள் தோற்றப் பொலிவில் புத்துணர்ச்சி பெறுவீர்கள். புதிய தொழில் சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பொறுப்புகள், பணிச் சுமையால் மன சஞ்சலம் உண்டாகும். எந்தப் பஞ்சாங்கத்தின் படி பார்த்தாலும் மேஷ ராசிக்கு ஏழரை சனி நடக்கும் காலம் என்பதால் தொழில் சார்ந்த அரசின் சட்ட திட்டங்களை விதிகளை மதிப்பது அவசியம்.
விரலுக்கேற்ற வீக்கம் தான் இருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டு அகலக்கால் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டாகும். விரும்பியவர்கள் வந்து இணைவார்கள். 10.2.2026 அன்று நள்ளிரவு 1.11 மணி முதல் 12.2.2026 அன்று பகல் 1.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் அதிக உழைப்பும் குறைந்த ஊதியமும் கிடைக்கும். அலைச்சல் மிகுந்த பயணம் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் நிதானத்தை கடைப்பிடிக்கவும். தாய் வழியில் மனக்கவலை கருத்து வேறுபாடு உண்டாகும். ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






