என் மலர்
மேஷம்
வார ராசிபலன் 6.7.2025 முதல் 12.7.2025 வரை
6.7.2025 முதல் 12.7.2025 வரை
விழிப்புடன் செயல்பட வேண்டிய வாரம். ராசி அதிபதி செவ்வாய் கேதுவுடன் இணைந்து நிற்பதால் மனசஞ்சலம் அதிகரிக்கும். முக்கிய பணிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். குடும்ப பிரச்சினை தீர்க்கும் முயற்சியில் சில மன ஸ்தாபங்கள் அதிகரிக்கும். வீட்டின் தோற்றத்தை மேம்படுத்த வீட்டைச் சுற்றிய சிறிய மாற்றங்கள் செய்வீர்கள்.
சொத்துக்களின் பராமரிப்பு செலவு அதிகரிக்கும். புதிய சொத்துக்களை வாங்கும் போதும், பழைய சொத்துக்களை விற்கும் போதும் விலை நிர்ணயம் செய்வதில் கவனம் தேவை. கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு நண்பர்களால் எதிர்மறை விளைவுகள் ஏற்படும். இளம் பெண்களுக்கு செவ்வாய்க் கேதுவை கடக்கும் வரை திருமணத்தடை இருக்கலாம்.
திருமணமான தம்பதியினர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டிய காலம். 6.7.2025 அன்று மாலை 4.01 மணி முதல் 9.7.2025 அன்று காலை 3.15 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வரவை விட செலவு அதிகமாகும். அண்டை அயலாருடன் சிறுசிறு மனபேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பவுர்ணமி அன்று முருகனை வழிபாடு செய்வது நல்லது.
`பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406