என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 4.1.2026 முதல் 10.1.2026 வரை

    4.1.2026 முதல் 10.1.2026 வரை

    மேஷம்

    சாதிக்கும் எண்ணம் மேலோங்கும் வாரம். பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராசி அதிபதி செவ்வாய்க்கும் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியனுக்கும் பாக்யாதிபதி குருவின் சம சப்தம பார்வை உள்ளது. இதனால் திரிகோணங்கள் பலம் பெறுகிறது. குடும்ப பிரச்சினைகள் அகலும். மனதில் நிரம்பி வழிந்த துக்கங்கள், துயரங்கள், சங்கடங்கள் விலகும். உங்களை ஏளனமாக அலட்சியமாக நினைத்தவர்கள் திரும்பி பார்க்கும் வகையில் உங்களுடைய வளர்ச்சி கூட போகிறது.

    தொழில் முன்னேற்றம், வியாபார அபிவிருத்தி, எடுத்த காரியத்தில் வெற்றி போன்ற நன்மைகள் நடக்கும். சுப பலன்கள் அதிகரிக்கும். கடன் வாங்கி, அட்வான்ஸ் வாங்கி போனசில் கடனை கழித்து வாழ்க்கையை ஓட்டிய நடுத்தர வர்க்கத்தினரின் வருமானம் உயரும். பழைய கடனை அடைத்து புதிய வாழ்க்கைக்கு அஸ்திவாரம் அமைப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.பெண்களுக்கு பொன், பொருள் ஆபரண சேர்க்கை உண்டாகும். திருமணத் தடை அகன்று தகுதியான வரன்கள் வரும். உடல் நலம் மிகச் சிறப்பாக இருக்கும். சஷ்டி திதியில் முருகனை வழிபடவும்.

    பிரசன்ன ஜோதிடர்

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×