என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 25.05.2025 முதல் 31.05.2025 வரை

    25.05.2025 முதல் 31.05.2025 வரை

    பொருளாதார மேன்மை உண்டாகும் வாரம். தனம், வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்ரன் ராசிக்குள் நுழைகிறார். ராசிக்கு 11-ம்மிடமான லாபஸ்தானம் முதல் ராசிக்கு 5-ம்மிடம் வரை கிரகங்கள் வரிசையாக நிற்பது கிரக மாலிகா யோகம். பொருளாதாரத்தில் தன் நிறைவு உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும்.

    இதுவரை கடனை திரும்பத் தராத உறவினர்கள் இந்த வாரம் கடனை செலுத்து வார்கள். வாழ்க்தைத் துணை வழிகளில் வருமானமும் திரண்ட சொத்தும் கிடைக்கும். பங்குச் சந்தை ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து தொடர்பான பேச்சு வார்த்தைகளை, முக்கிய முடிவுகளை இந்த வாரத்திற்குள் முடிப்பது நல்லது. தொழில், உத்தியோகம் காரணமாக சிலரின் தந்தை குடும்பத்தை பிரிந்து வெளியூர் செல்லலாம்.

    பெண்களுக்கு விலை உயர்ந்த ஆபரண, ஆடை என சுப விரயம் உண்டாகும். வீடு, மனை வாகனம் வாங்குவதில் மாமியாரின் பங்களிப்பு இருக்கும். சிந்தித்து நிதானமாக திட்டமிட்டால் எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய நண்பர்களிடம் எச்சரிக்கையாக பழக வேண்டும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். அமாவாசையன்று சாம்பார் சாதம் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×