என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 20.7.2025 முதல் 26.7.2025 வரை

    20.7.2025 முதல் 26.7.2025 வரை

    கடன் சார்ந்த பாதிப்புகள் குறையும் வாரம். மேஷ ராசிக்கு தன ஸ்தான அதிபதி சுக்ரன் ஆட்சி பலம் பெறுவது மிக அற்புதமான கிரக அமைப்பு. வாழ்க்கைத் தரம் உயரும் நேரம். இருண்டு கிடந்த வாழ்க்கை வெளிச்சமாகும். தைரியமும், தன்னம்பிக்கையும் கூடும். பொருளாதார மேன்மை உண்டாகும்.

    ஆன்லைன் வர்த்தகம், தகவல் தொடர்பு துறை, ஊடகங்களில் பணிபுரிபவர்களுக்கு, கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாகும். வெளிநாட்டுப் பயணம் மற்றும் வாணிபத்தால் தனலாபம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். பிள்ளைகள் பெயரில் நிரந்தர வைப்புத் தொகையை ஏற்படுத்துவீர்கள்.

    தங்கத்தில் முதலீடு செய்வீர்கள். பெண்கள் ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் மோகம் கூடும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும். அரசியல் பிரமுகர்களுக்கு கட்சி மாறும் எண்ணம் மேலோங்கும். நோய்க்கு உரிய வைத்தியம் கிடைக்கும். சொந்தமாக வீடு, நிலம், பூமி, வாகனம் வாங்கக் கூடிய நேரம் உள்ளது. ஆடி வெள்ளிக் கிழமை அம்மனுக்கு குங்கும அர்ச்சனை செய்யவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×