என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 11.5.2025 முதல் 17.5.2025 வரை

    11.5.2025 முதல் 17.5.2025 வரை

    அமைதியான வாரம். இந்த வாரத்தில் சூரியன் தன ஸ்தானத்திற்கும் குரு பகவான் உப ஜெய ஸ்தானமான 3ம் மிடத்திற்கும் செல்கிறார்கள். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் குரு பகவானை சேரும். முக்கிய கிரக அமைப்புகள் மேஷ ராசிக்கு மிக மிக சாதகமாக உள்ளது.

    எடுக்கப்பட்ட தொழில், உத்தியோக முயற்சிக்கான முழு பலனும் அங்கீகாரமும், வெற்றியும் உண்டு. சிலருக்கு தொழில் மாற்ற சிந்தனை அதிகரிக்கும். மனதை மகிழ்விக்கும் பதவி உயர்வு, பாராட்டு, இடப்பெயர்ச்சியும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலர் தவணை முறையில் புதிய வாகனம் வாங்கலாம். திருமணத்திற்கு நல்ல வரன் தேடிவரும்.

    பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். சாமர்த்தியமாகப் பேசி முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள். கணவனால் மனைவிக்கும் மனைவியால் கணவனுக்கும் நிம்மதி கிடைக்கும். 13.5.2025 அன்று அதிகாலை 2.27 மணி முதல் 15.5.2025 அன்று மதியம் 2.07 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது. எனவே அடுத்தவர் விஷயத்தில் தலையிடாமல் இருப்பதுடன் யாரையும் நம்பக்கூடாது. சித்ரா பவுர்ணமி அன்று தண்ணீர் தானம் வழங்கவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×