என் மலர்tooltip icon

    மேஷம்

    வார ராசிபலன் 20.4.2025 முதல் 26.4.2025 வரை

    20.4.2025 முதல் 26.4.2025 வரை

    எண்ணங்கள் பூர்த்தியாகும் வாரம். ராசியில் உச்சம் பெற்ற பூர்வ புண்ணிய அதிபதி சூரியன். பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெறுகிறது ஆன்ம பலம் பெருகும். சிலருக்கு அரசு வேலை கிடைக்கும். குல தெய்வ இஷ்ட தெய்வ பிரார்த்தனைகள் நிறைவேறும்.

    குழந்தைப்பேறுக்கான வைத்தியம் பலன் தந்து புத்திர பாக்கியம் கிடைக்கும். சிந்தனைகள், எண்ணங்களில் வேகம் அதிகரிக்கும். தொழில் ஞானம், தந்திரம் மிகுதியாகும். வியாபாரத்தில் வீண் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர்கள் சம்மதிப்பார்கள்.

    சரளமான பணப்புழக்கம் இருக்கும். நிறைவேறாத அனைத்து ஆசைகளும் நிறைவேறும். எதிலும் முழு முயற்சியுடன் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். சிலர் அதிர்ஷ்டத்தை துரத்தி ஏமாறவும் வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு பிள்ளைகளால் பெருமையும், நிம்மதியும் உண்டாகும். கருத்து வேறுபாட்டால் விலகி சென்ற நண்பர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். வீடு, வாகன யோகம் சித்திக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். நவகிரக குரு பகவானை வழிபடவும்.

    `பிரசன்ன ஜோதிடர்'

    ஐ.ஆனந்தி

    செல்: 98652 20406

    ×