என் மலர்
மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
மேஷம்
இன்றைய ராசிபலன் - 21 செப்டம்பர் 2024
முன்னேற்றம் கூடும் நாள். முக்கியப்புள்ளிகள் இல்லம் தேடி வருவர். சாமர்த்தியமாகப் பேசிக் காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 20 செப்டம்பர் 2024
வளர்ச்சி கூடும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். வரவு திருப்தி தரும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் அனுகூலம் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் உயரும். உறவினர்களின் உதவி உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 19 செப்டம்பர் 2024
பொழுது விடியும் பொழுதே பொன்னான தகவல் வந்து சேரும் நாள். வியாபார முன்னேற்றத்திற்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லை அகலும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 18 செப்டம்பர் 2024
தனவரவு தாராளமாக வந்து சேரும் நாள். தடைகள் அகலும். வீட்டிற்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 17 செப்டம்பர் 2024
கிரிவலம் வந்து கீர்த்தி காண வேண்டிய நாள். செலவிற்கு ஏற்ப வரவு வந்து சேரும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிக்க சற்று தாமதம் ஏற்படும். முன்கோபத்தை குறைத்துக்கொள்வது நல்லது.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 16 செப்டம்பர் 2024
எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். கூடுதல் லாபம் கிடைத்து குதூகலம் கூடும். வங்கி சேமிப்புகளை உயர்த்தும் எண்ணம் மேலோங்கும். பயணத்தால் பிரபலமானவர்களின் சந்திப்பு கிடைக்கும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 15 செப்டம்பர் 2024
தடைகள் அகல தைரியமாக முடிவெடுக்கும் நாள். அடுத்தவர் நலன் கருதி எடுத்த முயற்சியில் ஆதாயம் உண்டு. வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 14 செப்டம்பர் 2024
நேரில் சந்திக்கும் நண்பர்களால் நெஞ்சம் மகிழும் நாள். ஏற்ற இறக்கநிலை மாறும். எதிர்கால வளர்ச்சித் திட்டங்களைத் தீட்டுவீர்கள். சகோதர வழியில் எதிர்பார்த்த பண வரவுகள் உண்டு.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 13 செப்டம்பர் 2024
உடன்பிறப்புகளின் உதவி கிடைத்து மகிழும் நாள். வரன்கள் வாயில் தேடி வரும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த புது முயற்சி கைகூடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 12 செப்டம்பர் 2024
யோகமான நாள். நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். எடுத்த காரியத்தை எளிதில் முடித்து வெற்றி காண்பீர்கள். கடிதம் கனிந்த தகவலைத் தரும். கொடுத்த கடன்கள் வசூலாகும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 11 செப்டம்பர் 2024
விரயங்கள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். நினைத்த காரியத்தை முடிக்க முடியாது. உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்.
மேஷம்
இன்றைய ராசிபலன் - 10 செப்டம்பர் 2024
யோசித்து செயல்பட வேண்டிய நாள். வரவு வருவதில் தாமதம் ஏற்படும். வியாபார விரோதம் உண்டு. எதிலும் அவசர முடிவெடுப்பதை தவிர்ப்பது நல்லது. பயணங்களை மாற்றியமைப்பீர்கள்.






