என் மலர்
கும்பம் - Kumbam
வார ராசிபலன் 14.12.2025 முதல் 20.12.2025 வரை
14.12.2025 முதல் 20.12.2025 வரை
கும்பம்
அதிர்ஷ்டம் அரவணைக்கும் வாரம் ராசிக்கு 11ம்மிடமான லாப ஸ்தானத்தில் சூரியன் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை குரு பார்வையில் உள்ளது. தொழில் வியாபாரத்தில் நல்ல வாய்ப்புகள் தடையின்றி கிடைக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பிற்காக வெளியூர், வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உண்டாகும். அரசு உத்தியோக முயற்சி கைகூடும்.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு சமூக அந்தஸ்து உயரும். விருப்ப திருமணத்திற்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டுச் சொத்து கிடைப்பதில் சட்டச் சிக்கல் விலகும். சிலருக்கு அத்தை, மாமா அல்லது சித்தி, சித்தப்பா மூலம் அதிர்ஷ்ட சொத்து அல்லது பணம் கிடைக்கும்.
தாய் வழி உறவுகளுக்கு கொடுக்க வேண்டிய பாக்கியை செலுத்துவீர்கள். சிலர் குறுக்கு வழியில் அதிர்ஷ்டத்தை தேடி அலைவார்கள். 14.12.2025 அன்று இரவு 9.41 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி அக்கவுண்ட் நம்பரை யாருக்கும் தரக் கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. காவல் தெய்வ வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406






