புதிய கேஜெட்டுகள்
null

விரைவில் இந்தியா வரும் Fire டிவி ஒஎஸ் கொண்ட சியோமி ஸ்மார்ட் டிவி

Published On 2023-03-03 11:23 IST   |   Update On 2023-03-03 15:01:00 IST
  • சியோமி நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
  • புதிய சியோமி ஸ்மார்ட் டிவி ஃபயர் டிவி ஒஎஸ் கொண்டிருக்கும் என டீசரில் தெரியவந்துள்ளது.

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு F2-ஃபயர் டிவி மாடலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்தது. இதுவரை சியோமி விற்பனை செய்தவைகளில் பெரும்பாலானவை ஆண்ட்ராய்டு டிவி மாடல்கள் ஆகும். இந்த நிலையில் சியோமி நிறுவனம் ஃபயர் டிவி மாடலை இந்திய சந்தையில் மார்ச் 14 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது.

புதிய ஸ்மார்ட் டிவி ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என சியோமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. எனினும், ஸ்மார்ட் டிவி டீசரின் படி புதிய மாடல் ஃபயர் ஒஎஸ் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. சியோமியின் புதிய ஸ்மார்ட் டிவி அமேசான் மற்றும் சியோமி அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.

 

டீசரின் படி ஸ்மார்ட் டிவி-யின் யுஐ அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் ஃபயர் ஸ்டிக் 4K-இல் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இவைதவிர புதிய ஸ்மார்ட் டிவி பற்றி சியோமி எந்த தகவலும் வழங்கவில்லை. வரும் நாட்களில் இதுபற்றிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் மற்றொரு டீசரில் புதிய ஸ்மார்ட் டிவி மெல்லிய பெசல்கள், அதிக ஸ்கிரீன் டு பாடி ரேஷியோ கொண்டிருக்கிறது.

ஃபயர் ஒஎஸ் டிவியை அறிமுகம் செய்தன் மூலம் சியோமி நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அதிக ஆப்ஷன்களை வழங்க இருக்கிறது. ஏற்கனவே ஒனிடா, க்ரோமா, AKAI மற்றும் அமேசான் டிவிக்களில் ஃபயர் ஒஎஸ் வழங்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News