புதிய கேஜெட்டுகள்

சியோமியின் 12S சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விலை விவரம்

Published On 2022-07-05 10:23 GMT   |   Update On 2022-07-05 10:23 GMT
  • சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.
  • மேலும் இதில் 5000mAh பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.

சியோமி நிறுவனம் தனது அடுத்த 12S சீரிஸ் ஃபிளாக்‌ஷிப் போன்களை சீனாவில் வெளியிட்டு உள்ளது. தற்போது வெளியாகி உள்ள இந்த புதிய போன்களுக்கு சியோமி 12S, 12S ப்ரோ மற்றும் 12S அல்ட்ரா என பெயரிடப்பட்டு உள்ளது. சியோமி 12S ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்துடன் வருகிறது. இதில் புதிதாக அறிவிக்கப்பட்ட குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen1 சிப்செட் இடம்பெற்று உள்ளது.

சியோமி 12S ஸ்மார்ட்போன் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் எல்இடி ப்ளாஷ் உடன் கூடிய டிரிபிள் கேமரா செட் அப் அமைந்துள்ளது. சியோமி 12S ஆனது AMOLED டிஸ்ப்ளே மற்றும் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. மேலும் இதில் 5000mAh பேட்டரியும் இடம்பெற்று உள்ளது.


சியோமி 12S ஸ்மார்ட்போனின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.47 ஆயிரம் என்றும், 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ.50,700 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.55,400 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.61,300 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அதேபோலி சியோமி 12S ப்ரோ மாடலின் 8ஜிபி + 128ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.55,400 என்றும் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட்டின் விலை ரூ.58,900 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.63,650 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.69,500 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதை உயர்ரக மாடலான 12S அல்ட்ராவின் 8ஜிபி + 256ஜிபி வேரியண்ட் ரூ.70,700 எனவும், 12ஜிபி + 128ஜிபி வேரியண்ட் ரூ.76,600 என்றும் 12ஜிபி + 512ஜிபி வேரியண்ட் ரூ.82,500 எனவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News