புதிய கேஜெட்டுகள்

வெளியீட்டுக்கு தயாரானது சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போன் - லீக்கானது ரிலீஸ் தேதி

Update: 2022-06-25 06:11 GMT
  • சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது.
  • இந்த போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

ஸ்மார்ட்போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக இருக்கும் சியோமி தனது அடுத்த ஸ்மார்ட்போனை வெளியிட தயாராகி வருகிறது. சியோமி 12 அல்ட்ரா என பெயரிடப்பட்டுள்ள இந்த மாடலின் வெளியீட்டு விவரம் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இந்த போன் முதலில் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாம்.

வருகிற ஜூலை மாதம் 5-ந் தேதி இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சியோமி 12 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 8+ Gen 1 புராசசர் இடம்பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இது 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா உடன் வரும் எனவும் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவையும் கொண்டிருக்கும் என தெரிகிறது.


இதன் பேட்டரி மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்கள் குறித்த விவரம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் பின்னரே உலக சந்தைகளில் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது. வருகிற ஜூன் 28-ந் தேதி இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News