புதிய கேஜெட்டுகள்

இனி சங்கடம் வேண்டாம் - வாட்ஸ்அப்-இல் அறிமுகமான வேற லெவல் அம்சம்!

Published On 2023-05-16 14:01 GMT   |   Update On 2023-05-16 14:01 GMT
  • இந்த அம்சம் மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுகிறது.

மெட்டா நிறுவனம் தனது வாட்ஸ்அப் செயலியில் சாட் லாக் பெயரில் புதிய அம்சத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும் சாட்களை தனியே ஒரு ஃபோல்டர் உருவாக்கி அதில் பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் பாதுகாப்புடன் சேமித்துக் கொள்ளலாம்.

தனிப்பட்ட சாட்கள் மட்டுமின்றி க்ரூப் சாட்களையும் இந்த ஃபோல்டரில் வைத்துக் கொள்ள முடியும். இதன் மூலம் பயனர் தனியுரிமை பாதுகாக்கப்படுவதோடு, மெசேஜ் பிரீவியூக்கள் எதுவும் தெரியாது. இந்த அம்சம் உலகளவில் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

 

"இந்த அம்சம் அடிக்கடி தங்களது மொபைல் போனினை குடும்ப உறுப்பினரிடமோ அல்லது சந்தர்ப சூழல் காரணமாக மற்றவர்களிடம் மொபைலை கொடுப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று மெட்டா தனது வலைதளத்தில் தெரிவித்து உள்ளது.

வாட்ஸ்அப் சாட்-ஐ லாக் செய்யும் முன் பயனர்கள் குறிப்பிட்ட காண்டாக்ட் அல்லது க்ரூப்-ஐ தேர்வு செய்ய வேண்டும். சாட்களை மீண்டும் பார்க்க இன்பாக்ஸ்-ஐ கீழ்புறமாக ஸ்வைப் செய்தால், சாட்களின் மேல் லாக்டு ஃபோல்டர் இடம்பெற்று இருக்கும். லாக்டு ஃபோல்டருக்கான பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் மூலம் அன்லாக் செய்ய வேண்டும்.

எதிர்காலத்தில் சாட் லாக் ஆப்ஷன்களில் பயனர்கள் இதர சாதனங்களில் உள்ள சாட்களை லாக் செய்யும் வசதியை வழங்குவது, பிரத்யேக பாஸ்வேர்டுகளை வைத்துக் கொள்ள செய்வது போன்ற ஆப்ஷன்களை வழங்க மெட்டா திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து உள்ளது.

Tags:    

Similar News