புதிய கேஜெட்டுகள்

அடுத்த வாரம் அறிமுகமாகும் விவோ போல்டபில் போன்

Update: 2022-09-21 08:03 GMT
  • விவோ நிறுவனம் பல்வேறு டீசர்களை தொடர்ந்து புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் வெளியீட்டு தேதியை அறிவித்தது.
  • இது அந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ X போல்டு ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும்.

விவோ நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவது அனைவரும் அறிந்ததே. புது போல்டபில் போன் விவோ ஏற்கனவே அறிமுகம் செய்த விவோ X போல்டு போல்டபில் ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன்ா ஆகும். புது ஸ்மார்ட்போன் விவோ X போல்டு பிளஸ் 5ஜி என அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

அந்த வரிசையில் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி மாடல் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டு இருக்கிறது. டீசரின் படி புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செப்டம்பர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய விவோ மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அல்ட்ரா சோனிக் கைரேகை சென்சார் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது.

இத்துடன் புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் செய்ஸ் பிராண்டிங்கில் 50MP பிரைமரி கேமரா, 48MP அல்ட்ரா வைடு கேமரா, 12MP போர்டிரெயிட் மற்றும் 8MP பெரிஸ்கோப் கேமரா வழங்கப்பட இருக்கிறது. புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனில் மேம்பட்ட மற்றும் அதிக உறுதியான ஹின்ஜ் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ள ஹின்ஜ் டியுவி ரெயின்லாந்து சான்று பெற்று இருக்கிறது. பரிசோதனையில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று லட்சம் முறை மடிக்கப்பட்டு இருக்கிறது. புதிய விவோ X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 4730 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்பட இருக்கிறது. இத்துடன் 80 வாட் வயர்டு சார்ஜிங், 50 வாட் வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. 

Tags:    

Similar News