புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் விவோ V27 - அசத்தல் டீசர் வெளியீடு

Published On 2023-02-13 17:35 IST   |   Update On 2023-02-13 17:35:00 IST
  • விவோ நிறுவனம் இந்திய சந்தையில் புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • புதிய விவோ V27 ஸ்மார்ட்போன் மீடியாடெக் பிராசஸர் கொண்டிருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

விவோ நிறுவனம் புதிய V27 சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான டீசரை வெளியிட துவங்கி இருக்கிறது. புதிய டீசரில், #TheSpotlightPhone எனும் ஹாஷ்டேக் உடன் V27 ப்ரோ ஸ்மார்ட்போனின் டிசைன் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மூன்று பிரைமரி கேமரா சென்சார்கள், வளைந்த ஸ்கிரீன், ரிங் எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டிருக்கிறது.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய V27 ப்ரோ ஸ்மார்ட்போன் மீடியாடெக் டிமென்சிட்டி 8200 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ், 6.78 இன்ச் FHD+ 120Hz 60 டிகிரி வளைந்த AMOLED டிஸ்ப்ளே போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

விவோ V27 மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர், மாலி G610MC4 GPU, 50MP சோனி IMX766 பிரைமரி கேமரா, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்திய சந்தையில் புதிய விவோ V27 சீரிஸ் ப்ளிப்கார்ட் தளம் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட இருக்கிறது. வரும் வாரங்களில் விவோ V27 சீரிஸ் வெளியீட்டு தேதி மற்றும் இதர விவரங்கள் வெளியாகும்.

Tags:    

Similar News