புதிய கேஜெட்டுகள்

விரைவில் இந்தியா வரும் ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன்

Published On 2023-02-03 05:14 GMT   |   Update On 2023-02-03 05:14 GMT
  • ரியல்மி நிறுவனத்தின் புது கோகோ கோலா ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுகிறது.
  • புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் ஸ்டாண்டர்டு வேரியண்டில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம்.

ரியல்மி 10 ப்ரோ 5ஜி கோகோ கோலா எடிஷன் ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ரியல்மி ஸ்மார்ட்போன் பிப்ரவரி 10 ஆம் தேதி அறிமுகமாகிறது. முன்னதாக பெயர் குறிப்பிடாமல், இந்த ஸ்மார்ட்போனிற்கான டீசர்களை ரியல்மி வெளியிட்டு வந்தது. அந்த வகையில், இந்த மாடல் ரியல்மி 10 ப்ரோ 5ஜி என தெரியவந்துள்ளது.

அதிகாரப்பூர்வ அறிமுக போஸ்டரில் ஸ்மார்ட்போனின் முழு டிசைன் எப்படி இருக்கும் என அம்பலமாகி விட்டது. மேலும் இதற்கான மைக்ரோசைட்டில் ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனின் கூடுதல் விவரங்கள் இடம்பெற்றுள்ளது. புதிய ஸ்பெஷல் எடிஷன் ஸ்மார்ட்போனை வாங்குவோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்படும் என ரியல்மி அறிவித்து இருக்கிறது. ரூ. 200-க்கு தள்ளுபடி கூப்பன், 3வாட் ப்ளூடூத் ஸ்பீக்கர், எலெக்ட்ரிக் டூத்-பிரஷ், வாட்ச் 2, ரியல்மி கோகோ கோலா சின்னம் மற்றும் டீலக்ஸ் பாக்ஸ் செட் உள்ளிட்டவை வழங்குகிறது.

ஸ்மார்ட்போனின் வெளிப்புற டிசைன் அதன் ஒரிஜினல் மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. இத்துடன் ஸ்மார்ட்போனை தனித்துவம் மிக்கதாக மாற்றும் அம்சங்கள் இடம்பெற்று இருக்கும் என தெரிகிறது. ரியல்மி 10 ப்ரோ கோகோ கோலா எடிஷன் டூயல் டோன் டிசைன் கொண்டுள்ளது.

இதன் ஒருபுறம் பிளாக் நிறமும், மற்றொரு புறம் ரியல்மி லோகோ, மற்ற பாதியில் கோகோ கோலா பிராண்டிங் ரெட் அக்செண்ட் உடன் இடம்பெற்று இருக்கிறது. டூயல் கேமரா சென்சார்களை சுற்றி ரெட் அக்செண்ட் ரிங்குகள் உள்ளன. இந்த ஸ்மார்ட்போன் பாக்ஸ் டிசைன் மற்றும் வளைந்த எட்ஜ்களை கொண்டிருக்கிறது.

ரியல்மி 10 ப்ரோ அம்சங்கள்:

6.72 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்

அட்ரினோ 619 GPU

6 ஜிபி, 8 ஜிபி ரேம்

128 ஜிபி ஜிபி மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

108MP பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ்

2MP போர்டிரெயிட் கேமரா

16MP செல்ஃபி கேமரா

பக்கவாட்டில் கைரேகை சென்சார்

ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்

3.5mm போர்ட்

யுஎஸ்பி டைப் சி போர்ட்

5000 எம்ஏஹெச் பேட்டரி

33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags:    

Similar News