புதிய கேஜெட்டுகள்

புது X5 ப்ரோ இந்திய வெளியீட்டு தேதியை உறுதிப்படுத்திய போக்கோ

Update: 2023-01-31 13:43 GMT
  • போக்கோ நிறுவனத்தின் புது X சீரிஸ் ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • இந்திய வெளியீட்டின் போதே புது போக்கோ X5 ப்ரோ சர்வதேச சந்தையிலும் அறிமுகமாகிறது.

போக்கோ நிறுவனம் தனது புதிய மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் - போக்கோ X5 ப்ரோ இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தி விட்டது. புது ஸ்மார்ட்போன் பிப்ரவரி 6 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என கூறும் போஸ்டரை போக்கோ வெளியிட்டு உள்ளது. மேலும் இந்திய வெளியீட்டின் போதே, போக்கோ X5 ப்ரோ சர்வதேச சந்தையிலும் அறிமுகம் செய்யப்படுகிறது.

புது ஸ்மார்ட்போனை விளம்பரப்படுத்த போக்கோ நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்த்திக் பாண்டியாவை நியமித்துள்ளது. விளம்பர படத்திலும் ஹர்த்திக் பாண்டியா புது ஸ்மார்ட்போனை கையில் வைத்திருக்கும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது. புது ஸ்மார்ட்போன் போக்கோ டிசைன் பாரம்பரியத்தை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் பிரைட் எல்லோ மற்றும் பிளாக் நிற டாப் கொண்டிருக்கிறது. இதன் கேமரா பம்ப் பகுதி செவ்வக வடிவம் கொண்டிருக்கிறது. அதில் மூன்று கேமரா சென்சார்கள், எல்இடி ஃபிளாஷ் உள்ளிட்டவை இடம்பெற்று இருக்கிறது. புதிய போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் ரிபிராண்டு செய்யப்பட்ட ரெட்மி நோட் 12 ஸ்பீடு எடிஷன் மாடலாக இருக்கும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் போக்கோ X5 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் 10-பிட் OLED FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது. இத்துடன் 108MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு சென்சார், 2MP மேக்ரோ சென்சார், 5000 எம்ஏஹெச் பேட்டரி, 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News