புதிய கேஜெட்டுகள்

ரூ.4 ஆயிரம் ஆஃபர் உடன் இந்தியாவில் அறிமுகமானது போக்கோவின் F சீரிஸ் ஸ்மார்ட்போன்

Update: 2022-06-24 06:28 GMT
  • இந்த ஸ்மார்ட்போன் நைட் பிளாக், நெபுலா கிரீன், மூன்லைட் சில்வர் என 3 நிறங்களில் கிடைக்கிறது.
  • வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை தொடங்க உள்ளது.

போக்கோ நிறுவனம் தனது அடுத்த F சீரிஸ் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. போக்கோ F4 எனப்படும் இந்த மாடல் நேற்று நடைபெற்ற லான்ச் ஈவண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. பல்வேறு அம்சங்களுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போன், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 சிப்செட் மற்றும் AMOLED டிஸ்ப்ளே உடன் அறிமுகமாகி உள்ளது.

கேமராவை பொருத்தவரை போக்கோ F4 மாடல் 64MP டிரிபிள் கேமராவுடன் வந்துள்ளது. மேலும் இது 4,520mAh பேட்டரி மற்றும் 67W பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் அறிமுகமாகி உள்ளது. டைப் சி சார்ஜிங் போர்ட், ஆண்ட்ராய்டு 12, 6.67 இன்ச் டிஸ்பிளே என பல்வேறு சிறப்பம்சங்களை இந்த போன் கொண்டுள்ளது.


விலையை பொருத்தவரை போக்கோ F4 மாடலின் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.27,999 ஆகவும், 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.29,999 ஆகவும், 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்டின் விலை ரூ.33,999 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

எஸ்.பி.ஐ கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் பயனர்களாக இருந்தால் அவர்களுக்கு அறிமுக ஆஃபராக ரூ.1,000 இன்ஸ்டண்ட் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.3,000 சிறப்பு ஆஃபர் என மொத்த ரூ.4,000 ஆஃபர் உடன் பெற முடியும். இந்த ஸ்மார்ட்போன் நைட் பிளாக், நெபுலா கிரீன், மூன்லைட் சில்வர் என 3 நிறங்களில் வருகிற ஜூன் 27-ந் தேதி முதல் பிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது. 

Tags:    

Similar News