புதிய கேஜெட்டுகள்

என்ட்ரி-லெவல் பிரிவில் புதிய ஒப்போ டேப்லெட்.. வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-11-16 08:16 GMT   |   Update On 2023-11-16 08:16 GMT
  • ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது.
  • ஒப்போ ரெனோ 11 சீரிஸ் மாடல்களும் அறிமுகம்.

ஒப்போ நிறுவனத்தின் புதிய பேட் ஏர் 2 மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் இந்த மாடல் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஒப்போ பேட் ஏர் மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். புதிய டேப்லெட் வெளியீட்டை ஒட்டி, இதன் சிறப்பம்சங்கள் மற்றும் டிசைன் சார்ந்த விவரங்கள் டீசர்களாக வெளியாகி உள்ளன.

டீசர்களின் படி இந்த டேப்லெட் தடிமனான டிஸ்ப்ளே, வளைந்த கார்னர்கள் மற்றும் இருவித நிறங்களை கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இதன் டிசைனை பார்க்க ஒப்போ பேட் ஏர் மற்றும் ஒன்பிளஸ் பேட் கோ போன்றே காட்சியளிக்கிறது. நவம்பர் 23-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கும் ஒப்போ பேட் ஏர் 2 மாடலுடன் ஒப்போ ரெனோ 11 மற்றும் ரெனோ 11 ப்ரோ ஸ்மார்ட்போன்களும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

புதிய ஒப்போ பேட் ஏர் 2 டேப்லெட் ஒன்பிளஸ் பேட் கோ மாடலின் ரி-பிராண்டு செய்யப்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் புதிய ஒப்போ பேட் ஏர் 2 விலை CNY1000 இந்திய மதிப்பில் ரூ. 11 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பேட் கோ மாடலில் 11.35 இன்ச் 2.4K 1720x2408 பிக்சல் LCD டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் ஹீலியோ ஜி99 பிராசஸர், 8 ஜி.பி. ரேம், அதிகபட்சம் 256 ஜி.பி. மெமரி, 8MP பிரைமரி கேமரா, EIS, 8MP செல்ஃபி கேமரா, 8000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 33 வாட் சூப்பர்வூக் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News