புதிய கேஜெட்டுகள்

100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் உருவாகும் ஒப்போ ஸ்மார்ட்போன்

Published On 2023-06-30 03:23 GMT   |   Update On 2023-06-30 03:23 GMT
  • ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது.
  • மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் இது என தகவல்.

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. மிட் ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாக இருக்கும் ஒப்போ K11 ஸ்மார்ட்போன் அந்நறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஒப்போ K10 மாடலின் மேம்பட்ட வெர்ஷன் ஆகும். சமீபத்தில் இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் TENAA வலைதளத்தில் லீக் ஆகி இருந்தது.

இந்த வரிசையில் தற்போது சீனாவின் 3சி தளத்தில் இடம்பெற்று இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. ஒப்போ நிறுவன ஸ்மார்ட்போன்களிலேயே ஃபைன்ட் X6 ப்ரோ, ரெனோ 10 ப்ரோ மற்றும் ரெனோ 10 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களில் மட்டுமே அதிவேக சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

அதன்படி மிட் ரேன்ஜ் பிரிவில் 100 வாட் சார்ஜிங் வசதி பெறும் முதல் ஒப்போ ஸ்மார்ட்போன் என்ற பெருமையை K11 பெறும் என்று எதிர்பார்க்கலாம். சீனாவின் 3சி லிஸ்டிங்கின் படி ஒப்போ K11 ஸ்மார்ட்போன் PJC110 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இத்துடன் இந்த ஸ்மார்ட்போன் 5ஜி நெட்வொர்க் வசதி கொண்டிருக்கும் என்றும் VCBAHBCH அடாப்டர் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

ஒப்போ K11 ஸ்மார்ட்போனின் படங்கள் FCC வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. அதில் இந்த ஸ்மார்ட்போன் மூன்று கேமரா சென்சார்கள் மற்றும் எல்இடி ஃபிளாஷ் கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் ஸ்மார்ட்போனின் வலதுபுறம் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் இடம்பெற்று இருக்கிறது.

எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, FHD+ ரெசல்யூஷன், 120Hz ரிப்ரெஷ் ரேட்

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 782G பிராசஸர்

6 ஜிபி, 8 ஜிபி, 12 ஜிபி ரேம்

128 ஜிபி, 256 ஜிபி, 512 ஜிபி மெமரி

50MP பிரைமரி கேமரா, OIS

8MP அல்ட்ரா வைடு லென்ஸ்

2MP மேக்ரோ சென்சார்

16MP செல்ஃபி கேமரா

5000 எம்ஏஹெச் பேட்டரி

100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

Tags:    

Similar News