புதிய கேஜெட்டுகள்

புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் ஒன்பிளஸ் - அழகிய டீசர் வெளியானது

Published On 2024-02-20 12:35 GMT   |   Update On 2024-02-20 12:35 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.
  • இத்துடன் "It's about time," என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்த நிலையில், தற்போது இதற்கான டீசர் வெளியானது. முன்னதாக ஏப்ரல் 2021 வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் வாட்ச் மாடலை அறிமுகம் செய்தது.

புதிய ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடல் அதன் முந்தைய வெர்ஷனை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இதற்காக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசரில் ஸ்மார்ட்வாட்ச் டயல் மற்றும் வெளிப்புற வட்ட வடிவ டிசைன் வழங்கப்படுவது உறுதியாகி இருக்கிறது. இத்துடன் "It's about time," என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.

ஒன்பிளஸ் வாட்ச் 2 மாடலில் ஹோம் பட்டன் மற்றும் சுழலும் கிரவுன் வழங்கப்படும் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ஒன்பிளஸ் நிறுவனம் தனது ஒன்பிளஸ் கம்யூனிட்டியிலும் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் டீசர் படத்தை பகிர்ந்து, அது என்னவாக இருக்கும் என்று தவறான பதில்களை கமென்ட் செய்ய ஒன்பிளஸ் அதன் கம்யூனிட்டியில் இருப்பவர்களிடம் தெரிவித்துள்ளது. 

Tags:    

Similar News