புதிய கேஜெட்டுகள்

38 மணி நேர பிளேபேக் வழங்கும் நார்டு பட்ஸ் 2r இந்தியாவில் அறிமுகம்

Published On 2023-07-06 03:35 GMT   |   Update On 2023-07-06 03:35 GMT
  • நார்டு பட்ஸ் 2r மாடலில் டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருக்கிறது.
  • இத்துடன் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் இந்திய சந்தையில் புதிய நார்டு சீரிஸ் சாதனங்களை அறிமுகம் செய்து இருக்கிறது. ஒன்பிளஸ் நார்டு 3 5ஜி, நார்டு CE3, ஒன்பிளஸ் புல்லட்ஸ் Z2 ANC, ஒன்பிளஸ் நார்டு 2r மாடல்கள் இதில் அடங்கும்.

புதிய நார்டு பட்ஸ் 2r மாடலில் உள்ள குறைந்த விலை ஆடியோ தொழில்நுட்பம் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதன் இயர்பட்ஸ் சவுகரிமான அனுபவத்தை வழங்குகிறது. இத்துடன் 12.4mm டிரைவர்கள் வழங்கப்பட்டுள்ளன. இத்துடன் மாஸ்டர் இக்வலைசேஷன் சிஸ்டம்- போல்டு, பேஸ் மற்றும் பேலன்ஸ்டு போன்ற சவுன்ட் ப்ரோஃபைல்கள் வழங்கப்பட்டு இருக்கிறது.

டால்பி அட்மோஸ் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு இருப்பதால், இந்த இயர்பட்ஸ் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இதில் உல்ள டிராக் ஆடியோ டியுனர் சீரான செயல்திறன், சிறப்பான ஃபிடெலிட்டி வழங்குகிறது.

 

ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r மாடலில் டூயல் மைக் மூலம் சிறப்பான ஆடியோ மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி வழங்கப்படுகிறது. ஏ.ஐ. க்ளியர் கால் நாய்ஸ் கேன்சலேஷன் அம்சம் அழைப்புகளின் போது, பேக்கிரவுன்ட் நாய்ஸ்-ஐ குறைக்கிறது. இத்துடன் ப்ளூடூத் 5.3 மற்றும் 94ms வரையிலான லேடன்சி வழங்குகிறது.

இதில் உள்ள ஃபாஸ்ட் பேர் அம்சம் அதிவேக கனெக்டிவிட்டி வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் முழு சார்ஜ் செய்தால் எட்டு மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இத்துடன் சார்ஜிங் கேஸ் சேர்க்கும் போது 38 மணி நேரத்திற்கு பிளேபேக் வழங்குகிறது. இந்த இயர்பட்ஸ் IP55 தர வாட்டர் மற்றும் ஸ்வெட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டிருக்கிறது.

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

ஒன்பிளஸ் நார்டு பட்ஸ் 2r விலை ரூ. 2 ஆயிரத்து 199 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த இயர்பட்ஸ் டீப் கிரே மற்றும் ட்ரிபில் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News