புதிய கேஜெட்டுகள்

165Hz ரிப்ரெஷ் ரேட் உடன் உருவாகும் ஒன்பிளஸ் மாணிட்டர்கள்

Published On 2022-12-03 06:12 GMT   |   Update On 2022-12-03 06:12 GMT
  • ஒன்பிளஸ் நிறுவனம் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து புதிய மாணிட்டரை அறிமுகம் செய்ய இருக்கிறது.
  • இது தவிர ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்யும் பணிகளிலும் ஒன்பிளஸ் ஈடுபட்டு வருகிறது.

ஒன்பிளஸ் நிறுவனம் டிசம்பர் 12 ஆம் தேதி இரண்டு புது மாணிட்டர்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. புது மாணிட்டர் மூலம் ஒன்பிளஸ் நிறுவனம் தனது சாதனங்கள் பிரிவை நீட்டிக்க இருக்கிறது. புது மாணிட்டர்கள் X 27 மற்றும் E 24 என அழைக்கப்படுகின்றன. இவற்றில் முறையே 27 இன்ச் மற்றும் 24 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்பட்டு இருக்கிறது.

புது மாணிட்டர் மற்றும் அதன் அளவீடுகளை ஏற்கனவே உறுதிப்படுத்திய நிலையில், தற்போது இவற்றின் மிக முக்கிய அம்சம் பற்றிய தகவலை ஒன்பிளஸ் வெளியிட்டு இருக்கிறது. இந்த அம்சம் X27 மற்றும் E 24 என இரண்டு மாடல்களிலும் வழங்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் 165Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இது அனிமேஷன் காட்சிகளை சிறப்பாக கையாள்வதோடு, தலைசிறந்த வியூவிங் அனுபவத்தை வழங்கும்.

இந்த மாணிட்டர் 1ms ரெஸ்பான்ஸ் டைம் கொண்டிருப்பதால், கேம்பிளே மிகவும் சீராக இருக்கும். புதிய ஒன்பிளஸ் மாணிட்டர்களில் AMD-யின் Freesync பிரீமியம் தொழில்நுட்பம் வழங்கப்படுகிறது. இது கேம் மற்றும் வீடியோ பார்க்கும் போது அவை ஸ்டடர் அல்லடு ஸ்கிரீன் டியரிங் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.

இரு மாணிட்டர்களில் ஒன்பிளஸ் X 27 மாணிட்டர் பிரமீயம் மாடல் என்றும் E 24 மாடல் மிட்-ரேன்ஜ் சாதனம் என்றும் ஒன்பிளஸ் ஏற்கனவே தெரிவித்துவிட்டது. இவற்றில் X 27 மாடல் தலைசிறந்த டிஸ்ப்ளே மற்றும் செயல்திறன் பணி மற்றும் கேமிங்கிற்கு ஏற்றவாரு இயங்கும். E 24 மாடல் அன்றாட பணிகளுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்றும் இதன் விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது.

ஒன்பிளஸ் X 27 மற்றும் E 24 மாணிட்டர்கள் பற்றிய கூடுதல் விவரங்கள் வரும் நாட்களில் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் புது மாணிட்டர்களுடன் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய Y1S ப்ரோ 55 இன்ச் ஸ்மார்ட் டிவி மாடலையும் அறிமுகம் செய்ய இருக்கிறது.

Tags:    

Similar News