2023 துவக்கத்தில் அறிமுகமாகும் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2
- ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படுகிறது.
- புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அந்நிறுவனத்தின் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஜூலை மாத வாக்கில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை அறிமுகம் செய்தது. இது ஒன்பிளஸ் நிறுவனத்தின் முதல் பிளாக்ஷிப் தர ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஆகும். தற்போது இந்த மாடலின் மேம்பட்ட வெர்ஷன் விரைவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது.
அடுத்த ஆண்டின் முதல் காலாண்டு வாக்கில் ஒன்பிளஸ் நிறுவனம் புதிய பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ்-ஐ அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த இயர்பட்ஸ் உற்பத்தி நிலையை எட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. எனினும், இதன் உற்பத்தி ஆசியா மற்றும் ஐரோப்பிய பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுவதாக டிப்ஸ்டரான முகுல் ஷர்மா தெரிவித்து இருக்கிறார்.
புதிய ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மாடல் ஒன்பிளஸ் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை பிளாக்ஷிப் மாடல்- ஒன்பிளஸ் 11 உடன் அறிமுகம் செய்யப்படும் என்றும் முகுல் ஷர்மா தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டின் துவக்க மாதங்களில் ஒன்பிளஸ் பிரீமியம் ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறது. அந்த வரிசையில், அடுத்த ஆண்டு இயர்பட்ஸ் மாடலும் அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் ஸ்டெம் வைத்த இன்-இயர் டிசைன் மற்றும் சிலிகாம் டிப்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். மேலும் இதில் 11mm மற்றும் 6mm டூயல் ஆடியோ டிரைவர்கள், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதில் வழங்கப்படும் ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் (ANC) வசதி 45db வரை நாய்ஸ் ரிடக்ஷன் வசதியை வழங்கும்.
மற்ற டாப் எண்ட் ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடல்களை போன்றே இதிலும் அடாப்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் வசதி, ஆம்பியண்ட் மோட் போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம். ஏற்கனவே வெளியான தகவல்களில் ஒன்பிளஸ் பட்ஸ் ப்ரோ 2 மூன்று மைக்ரோபோன்களை கொண்டு காலிங் மற்றும் ANC வசதிகளை வழங்கும் என கூறப்பட்டது. மேலும் இதில் ஸ்பேஷியல் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.