புதிய கேஜெட்டுகள்

ப்ளூடூத் காலிங், ஸ்போர்ட்ஸ் மோட்கள்.. குறைந்த விலையில் அறிமுகமான நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச்

Published On 2024-02-16 12:49 GMT   |   Update On 2024-02-16 12:49 GMT
  • நாய்ஸ் ஸ்மார்ட்வாட்ச் ஸ்போர்ட்ஸ் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • புதிய ஸ்மார்ட்வாட்ச்-இல் 200-க்கும் அதிக வாட்ச் ஃபேஸ்கள் உள்ளன.

நாய்ஸ் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஸ்மார்ட்வாட்ச் நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ மாடலில் 2 இன்ச் கர்வ்டு டிஸ்ப்ளே, நூற்றுக்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், உடல்நல அம்சங்கள், ப்ளூடூத் காலிங் என பல்வேறு அம்சங்கள் உள்ளன.

இத்துடன் 200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள், நாய்ஸ் ட்ரூ சின்க் டெக் மூலம் டயல் பேட் மற்றும் ரீசென்ட் கால் ஹிஸ்ட்ரியை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச்-இல் இன்-பில்ட் மைக்ரோபோன் மற்றும் ஸ்பீக்கர் வசதி உள்ளது. இதில் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

 


நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ அம்சங்கள்:

2.0 இன்ச் HD TFT LCD ஸ்கிரீன், 2.5D கர்வ்டு கிளாஸ் டிஸ்ப்ளே

200-க்கும் அதிக கிளவுட் சார்ந்த வாட்ச் ஃபேஸ்கள்

ப்ளூடூத் காலிங் வசதி

பில்ட்-இன் மைக்ரோபோன்

வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி

ஹார்ட் ரேட், SpO2, ஸ்டிரெஸ் மானிடரிங்

115-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள்

ஏழு நாட்களுக்கு பேக்கப் வழங்கும் பேட்டரி

நோட்டிஃபிகேஷன் டிஸ்ப்ளே

வானிலை அப்டேட்கள்

கேமரா மற்றும் மியூசிக் கன்ட்ரோல்

ரிமைன்டர், அலாரம், கால்குலேட்டர்

புதிய நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் சிலிகான் ஸ்டிராப் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. இது மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் லெதர் ஸ்டிராப் வேரியன்ட்கள் கிளாசிக் பிளாக், கிளாசிக் பிரவுன் நிறங்களிலும், மெட்டாலிக் ஸ்டிராப் வேரியன்ட் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் நிறங்களிலும் கிடைக்கிறது.

நாய்ஸ் கலர்ஃபிட் மேக்ரோ ஸ்மார்ட்வாட்ச் விலை ரூ. 1499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விற்பனை பிப்ரவரி 19-ம் தேதி துவங்க இருக்கிறது. அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்வாட்ச் மிஸ்ட் கிரே, ஸ்பேஸ் புளூ மற்றும் ஜெட் பிளாக் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1399 என்றும் கிளாசிக் புளூ, கிளாசிக் பிரவுன் நிற ஆப்ஷன்களின் விலை ரூ. 1499 என்றும் பிளாக் லின்க் மற்றும் சில்வர் லின்க் விலை ரூ. 1599 என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளன.

Tags:    

Similar News