புதிய கேஜெட்டுகள்

உலகின் மெல்லிய Foldable ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்த ஹானர்

Published On 2024-01-27 10:15 GMT   |   Update On 2024-01-27 10:15 GMT
  • ஹானர் மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • இதில் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். உள்ளது.

ஹானர் பிரான்டு ஸ்மார்ட்போன் சந்தையில் தொடர்ச்சியாக புது சாதனங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், ஐரோப்பாவில் ஹானர் மேஜிக் V2 மாடல் இணைந்துள்ளது.

கடந்த ஆண்டு சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், உலகின் மெல்லிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மாடலான மேஜிக் V2 தற்போது ஐரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

 


அம்சங்களை பொருத்தவரை ஹானர் மேஜிக் V2 மாடலில் 7.9 இன்ச் OLED, 120Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட மெயின் டிஸ்ப்ளே, 5.45 இன்ச் OLED கவர் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிளஸ் பிராசஸர், 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று சென்சார்கள், 50MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 சார்ந்த மேஜிக் யு.ஐ. 6.1 ஒ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் 4610 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 66 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. ஹானர் மேஜிக் V2 மாடல் பர்பில் மற்றும் பிளாக் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

ஐரோப்பிய சந்தையில் ஹானர் மேஜிக் V2 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பர்பில் மற்றும் பிளாக் நிற வேரியன்ட்களின் விலை முறையே 1 ஆயிரத்து 699.99 யூரோக்கள் இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 79 ஆயிரத்து 585 மற்றும் 1 ஆயிரத்து 999 யூரோக்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 11 ஆயிரத்து 172 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News