புதிய கேஜெட்டுகள்

கோரல் நிறத்தில் பிக்சல் 7a.. ப்ளிப்கார்ட் வெளியிட்ட சூப்பர் டீசர்

Published On 2023-10-02 09:11 GMT   |   Update On 2023-10-02 09:11 GMT
  • பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.
  • கூகுள் பிக்சல் 7a மாடல் மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 7a புதிய நிறத்தில் அறிமுகம் செய்யப்படுகிறது. புதிய நிற வேரியண்ட் இந்திய சந்தையில் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வருகிறது. அதன்படி விரைவில் துவங்க இருக்கும் பிக் பில்லியன் டே சேல்-இல் பிக்சல் 7a புதிய நிற வேரியண்ட் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் பிக்சல் 7a மாடல் கடந்த மே மாதம் நடைபெற்ற கூகுள் I/O நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது.

தற்போது கூகுள் பிக்சல் 7a மாடல் சீ, சார்கோல் மற்றும் ஸ்னோ என மூன்று நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இவற்றுடன் கோரல் நிற வேரியண்ட் விரைவில் இணைய இருக்கிறது. கோரல் நிற வேரியண்ட் இந்தியா தவிர மற்ற நாடுகளில் ஏற்கனவே விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிற வேரியண்டிற்கான டீசர் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் வெளியாகி உள்ளது.

 

இந்திய சந்தையில் கூகுள் பிக்சல் 7a மாடல் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி என ஒற்றை வேரியண்டில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 43 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. எனினும், ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல்-இல் இதன் விலை சற்று குறைக்கப்படவோ அல்லது அதிக சலுகைகள் வழங்கப்படவோ வாய்ப்புகள் உண்டு.

அக்டோபர் 5-ம் தேதி கூகுள் பிக்சல் மாடல்களுக்கான சலுகை விவரங்களை ப்ளிப்கார்ட் அறிவிக்க இருக்கிறது. இதுதவிர கூகுள் நிறுவனம் பிக்சல் 8 சீரிஸ் மாடல்களை அக்டோபர் 4-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய பிக்சல் 8 சீரிஸ் மாடல்கள் இந்தியாவில் ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு அக்டோபர் 4-ம் தேதி துவங்குகிறது.

Tags:    

Similar News