ஷாட்ஸ்
ஜூலை 20 முதல் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்கான டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகம்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. இத்திட்டத்தின்கீழ் தகுதியான பயனாளிகளின் விவரங்களை தேர்ந்தெடுக்கும் பணிகள் தொடங்கின. இதற்கான விண்ணப்ப படிவத்தை தமிழக அரசு வெளியிட்டது. வரும் 20-ம் தேதி முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான டோக்கன் மற்றும் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்தது.