ஷாட்ஸ்

மகளிர் உரிமைத் தொகை திட்டம்: புதிய அப்டேட்டை வெளியிட்டது தமிழக அரசு

Published On 2023-10-22 10:49 IST   |   Update On 2023-10-22 10:49:00 IST

தமிழக அரசு மகளிர் உரிமைத் தொகை தொடர்பாக வெளியிட்டுள்ள செய்தில் கூறியிருப்பதாவது:-

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயன்பெறுவோரின் தரவுகள் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். வருமானம், இறப்பு பதிவு, வாகன பதிவு உள்ளிட்ட தரவுகள் குறித்து குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்யப்படும். ஜி.எஸ்.டி., சொத்து வரி, தொழில்வரிகள் உள்ளிட்ட தரவுகள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

காலாண்டு, அரையாண்டு காலங்களில் பரிசீலனை செய்யப்பட்டு தகுதி உறுதி செய்யப்படும். தகுதி இழக்கும் பயனாளிகள் தானியங்கி புதுப்பித்தல் முறையில் நீக்கப்படுவார்கள். அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News