தாய் வீட்டு சீர் போன்று உள்ளது..!: ஆயிரம் பெற்ற பெண்கள் மகிழ்ச்சி
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் ஆயிரம் பெறுவதற்கு தகுதிப் பெற்றவர்களுக்கு, நேற்று முதல் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டு வருகிறது. பணம் பெற்றவர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகிறார்கள்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த வீட்டு வேலைக்குச் செல்லும் பெண் ஒருவர் 1000 ரூபாய் கிடைக்கப் பெற்றது குறித்து கூறியதாவது:-
ஆயிரம் ரூபாய் கிடைத்ததில் ரொம்ப ரெம்ப மகிழ்ச்சி. முதலமைச்சர் பெண்களுக்காக இலவச பயணம், புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். பெற்றவர்களே ஆயிரம் ரூபாய் கொடுப்பது சாத்தியமில்லை. முதலமைச்சர் கொடுப்பது தாய் வீட்டு சீர் போன்று உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை இந்த ஆட்சியால் பயன் அடைந்து வருகிறார்கள். பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் முதலமைச்சருக்கு நன்றி, வாழ்த்துக்கள். ஹேப்பி முதலமைச்சர் சார்... என மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.