ஷாட்ஸ்
தவறான நோக்கத்துடன் அணுகினார்.. ஓ.பி.எஸ். மகன் மீது பாலியல் புகார் அளித்த பெண்
காயத்ரி தேவி என்ற பெண், பாராளுமன்ற உறுப்பினர் ஓ.பி. ரவீந்திரநாத் மீது தமிழக டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். உடன்பிறவா சகோதரனாக நினைத்து பழகி வந்த ஓ.பி.ரவீந்திரநாத், தன்னை தவறான நோக்கத்துடன் அணுகியதாக தெரிவித்தார். அதற்கு மறுப்பு கூறியதால், செல்போனில் ஆபாச வார்த்தைகளில் பேசி வருவதாகவும், அவரது நண்பர்கள் மூலம் தொடர்ந்து தனக்கு மிரட்டல் அளித்து வருவதாகவும் கூறினார்.