ஷாட்ஸ்
மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் தமிழகம் வருகிறார்
மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நாளை மறுதினம் (ஜூன் 20-ம் தேதி) சென்னை வருகிறார். தாம்பரம் அருகே இரும்புலியூரில் மாலை 5 மணிக்கு நடைபெறும் பா.ஜ.க சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். அதன்பின், சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளாவின் கொச்சிக்கு ராஜ்நாத்சிங் விமானத்தில் புறப்பட்டுச் செல்கிறார்.