ஷாட்ஸ்
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்தே பாராளுமன்ற தேர்தலை சந்திப்போம் - டி.டி.வி.தினகரன்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் சாமிதரிசனம் செய்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வரும் பாராளுமன்ற தேர்தலை ஓ.பன்னீர்செல்வத்துடன் சேர்ந்துதான் சந்திப்போம். இனி வரும் காலங்களில் அனைத்து நிகழ்விலும் சேர்ந்துதான் பயணிப்போம். பாராளுமன்ற தேர்தலில் அமமுக நிலைப்பாடு குறித்து டிசம்பரில் தெரிவிக்கப்படும் என்றார்.