ஷாட்ஸ்
நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது- முதல் அமைச்சர் ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் பதவில் ''நீட் தேர்வின் பலன் பூஜ்ஜியம் என்பதை மத்திய அரசு ஒப்புக்கொண்டுள்ளது. கட்ஆஃப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டதன் மூலம் நீட் தேர்வு தேவையற்றது என்பதை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. பயிற்சி மையங்களுக்கு பணம் செலுத்துவதற்கான தேர்வாக மாறிவிட்டது. நீட் தேர்வு மூலம் உயிரிழப்புகளை ஏற்படுத்திய பா.ஜனதா அரசை அகற்ற வேண்டும்'' எனக் குறிப்பிட்டுள்ளார்.